‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ – பரிந்துரைகளைப் பெறும் பணியில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – DMKManifesto2024’ என்று கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ளது திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு.
வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மஸ்தான், இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.