Site icon Chennai City News

‘HMPV வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்’ : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

‘HMPV வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்’ : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றை இந்த உலகம் இதுவரை மறந்து இருக்காது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் இழந்தது அவ்வளவு. கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொரோனா தொற்றுக்கு இறையானது இன்னும் நம் கண்கள் முன்னே வந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (HMPV) என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் HMPV வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து பொதுமக்கள் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.இந்த வைரஸ் 3 அல்லது 5 நாட்களிலேயே வைரஸ் தானாக சரியாக விடும்.

அவசர காலங்களில் எந்தெந்த வைரஸ், எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் மற்றும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO அறிவுரைகள் வழங்கும். ஆனால் இந்த வைரஸ் தொற்று குறித்து இதுவரை அந்த அறிவிப்பும் இதுவரை WHO வழங்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைரஸ் பரவியுள்ளது 2001 இல் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version