‘பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை’ : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!

0
68

‘பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை’ : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!

”பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை” : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!

பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழங்கி இருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் அவர் முன்பு விசாரணக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் போஷ் சட்டத்தின் அடிப்படையில் விதிகளை போஷ் சட்டத்தில் சொல்லியுள்ளபடி தான் செயல்படுத்த முடியும், இதுகுறித்து அரசின் விளக்கத்தை அடுத்த விசாரனையில் தெரிவிப்பதாக கூறினார்.

இந்த வழக்கில் மாநில அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிப்பதாக சொன்னார்.

அதேபோல், காவல்துறை இயக்குநர் சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா,”நீதிமன்ற உத்தரவின்படி போஷ் ( POSH ACT) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினரிடமிருந்தும் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும்” என்றார்.

மேலும், இப்போது பெண்களிடையே நிறைய விழிப்புனர்வு ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும்.இடங்களில் மட்டுமின்றி மற்ற வகைகளிலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பாலியல் புகார்களுக்கு தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள். காவல்துறையினரும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

அப்போது நீதிபதி மஞ்சுளா குறுக்கிட்டு சமீபத்தில் கூட காவல் துறையில் டி.ஐ.ஜி அந்தஸ்தில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி மீது வந்த புகாரை அடுத்து உடனடியாக அவரை தமிழ்நாடு அரசு தற்காலிக பணி நீக்கம் செய்ததை குறிப்பிட்டார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, ”காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி மீது முறையாக புலன்விசாரனை செய்து மூன்று ஆண்டு காலம் தண்டனை பெற்றதை குறிப்பிட்டு உயர்திகாரிகள் மீது புகார் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் தற்போது புகார் கொடுக்க முன்வருகிறார்கள்” என்றார்.

அதுமட்டுமின்றி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்களுடைய கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, அரசின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தற்போதுபலரும் அச்சமின்றி புகார் தெரிவிக்க முன்வருகிறார்கள் என்றார்.

அப்போது நீதிபதி மஞ்சுளா ”அண்ணா பல்கலைகழகம் பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர் எடுத்த விரைவு நடவடிக்கைகள், டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது” என்றார்.

மேலும், ஒன்றிய, மாநில அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லுகிற நிலையை உருவாக்க வேண்டும். பாலின உணர்திறன் மேம்பட அதற்கென நிதியினை ஒதுக்கிட வேண்டும். வேலைசெய்யும் இடங்களில் அமைந்திருக்ககூடிய அனைத்து உள் புகார் குழு ( internal complaints committee) விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். போஷ் சட்டத்தின் அடிப்படையில் விதிகளை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இவ்வழக்கை மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.