Site icon Chennai City News

‘தி.மு.க.வை தவிர்த்துவிட்டு சென்னையின் வளர்ச்சி வரலாற்றை எழுத முடியாது!’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

‘தி.மு.க.வை தவிர்த்துவிட்டு சென்னையின் வளர்ச்சி வரலாற்றை எழுத முடியாது!’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, நிகழ்ச்சி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது X வலைதளப் பக்கத்தில், “கழக அரசின் பங்களிப்பை தவிர்த்துவிட்டு சென்னை மாநகரின் வளர்ச்சி வரலாற்றை எழுதிட முடியாது!

சென்னைக்குப் பெயரிட்டு வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், மேயராக ‘சிங்காரச்சென்னை’ தந்து மேம்படுத்தியவர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்.

இன்றைக்கு முதலமைச்சராக ‘சிங்காரச் சென்னை 2.o’ மூலம், சென்னையின் வளர்ச்சியை உலக நாடுகளே வியக்கின்ற வகையில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

இதன் ஓர் அங்கமாக, நம் திராவிட மாடல் அரசின் சார்பில், ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியில் நடைபெறவுள்ள 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 17 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தோம்.

தொடர்ந்து, மாநகராட்சியில் பணிவாய்ப்பினை வழங்கும் வகையில் 559 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.

‘மாநகரங்களுக்கெல்லாம் மாநகர் நம் சென்னை’ என்ற நிலையை உருவாக்கிட என்றும் அயராது உழைப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version