தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் : யாருக்கு என்ன துறைகள் மாற்றம்?

0
68

தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் : யாருக்கு என்ன துறைகள் மாற்றம்?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஆளுநர் மாளிகை அளித்துள்ளது.

அதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.

கூடுதலாக ஒதுக்கப்பட்ட காதி, கிராம தொழில்துறையுடன் சேர்த்து வனத்துறையையும் அமைச்சர் பொன்முடி கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.