
தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே இன்று கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மே மாதம் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதத்திலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணியிலான ஊரடங்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேர்தல் முகவர்கள் வேட்பாளர்கள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும். சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புள் கட்டுப்பாடுகளுடன் தொடரலாம். கோயில்களில் குடமுழுக்கு விழா பக்கதர்கள் இல்லாமல் நடத்திக் கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகளுக்கு செல்வோர் உரிய அடையாள காண்பித்து பயணிக்கலாம். மே மாதங்களில் சனக்கிழமையும் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.