Site icon Chennai City News

கின்னஸ் சாதனை படைத்த அபியும் நானும் சிறுவன்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கின்னஸ் சாதனை படைத்த அபியும் நானும் சிறுவன்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் அதிகம் விரும்பிப் பார்க்கும் தொடராக அபியும் நானும் தொடர் உள்ளது.

இந்தத் தொடரில் அரவிந்த் ஆகாஷ் மற்றும் வித்யா மோகனின் மகனாக முகில் என்ற வேடத்தில் நித்தீஷ் என்ற சிறுவன் நடித்து வருகிறார். நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்களை நித்தீஷ் பெரிதும் கவர்ந்துள்ளார்.

தற்போது 7 வயதாகும் நித்தீஷ் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நித்தீஷ் 60 நொடிகளில் 60 கார்டூன் கதாப்பாத்திரங்களின் பெயர்களை சொல்லி உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் படித்திருக்கிறார்.

60 நொடிகளில் 52 பெயர்களை சொன்னதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நித்தீஷிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அபியும் நானும் தொடரில் தனது வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக நித்தீஷ் தற்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் , விடியோக்கள் என கலக்கிக்கொண்டிருக்கிறார்.

Exit mobile version