Site icon Chennai City News

‘உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

‘உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ”இந்திய விடுதலையை அகிம்சை வழியில் வென்றெடுத்து, ஒற்றுமை – சகோதரத்துவம் – சமூக நல்லிணக்கம் போன்ற மனிதகுல மேன்மைக்கான கோட்பாடுகளின் வழியே உலகுக்கே பாடமாக திகழும் மகாத்மா காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.” புகழாரம் சூட்டியுள்ளார்.

Exit mobile version