சைரன் சினிமா விமர்சனம் : சைரன் விறுவிறுப்பான ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள் :
ஜெயம், கீர்த்தி, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, துளசி, அழகம்பெருமாள், அருவி மதன், யுவினா பார்த்தவி, அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார்
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
தயாரிப்பு நிறுவனம் – ஹோம் மூவி மேக்கர்ஸ்
இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார்
எழுதி இயக்கியவர் – ஆண்டனி பாக்யராஜ் ஏ
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பின்னணி இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – கதிர் கே
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ் எம்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
நடன அமைப்பு – பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்கள் – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேதா, நித்யா வெங்கடேசன், ஜெபர்சன் டி.
நிர்வாக தயாரிப்பு – ஓமர்
தயாரிப்பு நிர்வாகி – சக்கரத்தாழ்வார் ஜி
தயாரிப்பு மேலாளர் – அஸ்கர் அலி ஏ
மக்கள் தொடர்பு சதீஷ் (AIM)

ஜெயம், கீர்த்தி, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, துளசி, அழகம்பெருமாள், அருவி மதன், யுவினா பார்த்தவி, அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார்
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
தயாரிப்பு நிறுவனம் – ஹோம் மூவி மேக்கர்ஸ்
இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார்
எழுதி இயக்கியவர் – ஆண்டனி பாக்யராஜ் ஏ
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பின்னணி இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – கதிர் கே
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ் எம்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
நடன அமைப்பு – பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்கள் – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேதா, நித்யா வெங்கடேசன், ஜெபர்சன் டி.
நிர்வாக தயாரிப்பு – ஓமர்
தயாரிப்பு நிர்வாகி – சக்கரத்தாழ்வார் ஜி
தயாரிப்பு மேலாளர் – அஸ்கர் அலி ஏ
மக்கள் தொடர்பு சதீஷ் (AIM)

செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த ஆயுள் தண்டனைக் கைதி திலகன் (ஜெயம் ரவி), சிறையில் நல்ல பெயர் எடுக்கும் திலகனுக்கு, தன் தந்தை மற்றும் மகளை பார்க்க 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும் போது, திலகனின் மகள் (யுவினா பார்த்தவி) தன் அப்பா ஒரு கொலைக்கரான் என்று நம்புவதால் அவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார் மற்றும் அவரது பெயரைக் குறிப்பிடுவதைக் கூட வெறுக்கும் கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன் எனக் கூறி வீட்டில் இருந்து தன் அத்தையை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். திலகன் சிறையில் பரோலில் வந்ததின் நோக்கம் தனது மனைவி ஜென்னியை (அனுபமா பரமேஸ்வரன்) கொலை செய்து, இந்த கொலை பழியை தன் மீது சுமத்தி ஆயுள் தண்டனை பெற செய்த உண்மையான கொலைகார அயோக்கியர்களை பழி வாங்கவும் முயற்சி செய்கிறார். மறுபுறம், காவலில் வைக்கப்பட்ட கைதி சித்திரவதையால் மரணித்ததாக கூறப்படும் குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்). ஆனால் நந்தினி தான் யாரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறுகிறார். விடுவிக்கப்பட்ட பின்னர் பணிக்குத் திரும்பிய இன்ஸ்பெக்டர் நந்தினி, திலகன் தினந்தோறும் வந்து கையெழுத்து போடும் அதே காவல் நிலையத்தில் பணிக்கு திரும்புகிறார். திலகன் வெளியே வந்த நேரம் அவரைச் சுற்றி அடுத்தடுத்து செல்வாக்கு மிக்க நபர்கள் ஒரு சிலர் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டர் நந்தினி திலகன் தனது பரோல் நேரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் இந்த கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிக்கத் தொடங்குகிறார். இன்ஸ்பெக்டர் நந்தினி திலகன் சம்பந்தப்பட்ட தகவல்களையும், கொலை ஆனவர்களின் தடயங்களை சேகரிக்கிறார், ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது. இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? லாக்கப் மரணத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் நந்தினி இந்த கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா இல்லையா? எதற்காக எதிரிகள் திலகனின் மனைவியை கொலை செய்து பழியை திலகன் மீது சுமத்தினார்கள்? திலகன் மகளுடன் மீண்டும் இணைந்தாரா? திலகன் எதிரிகளை பழி தீர்த்தாரா? போன்ற கேள்விகளுக்கு சைரன் கதை ‘நான் லீனியர்’ முறைப்படி விவரிக்கிறது.


ஜெயம் ரவியின் ஷேடோ போலீஸாக பயணிக்கும் கான்ஸ்டபிள் வேளாங்கண்ணி கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை அருமை.


சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நாயகனின் கடந்த கால மற்றும் நிகழ்கால காட்சிகளை எந்த வித குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக முன்வைத்து நான் லீனியரில் பயணிக்கும் திரைக்கதைக்கு இண்டர்கட் காட்சிகள் மூலம் பலம் சேர்த்துள்ளார் எடிட்டர் ரூபன்.

மொத்தத்தில் குடும்ப அம்சங்களுடன் பிரம்மாண்ட பொருட்செலவில் ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் மற்றும் இணை தயாரிப்பாளர் அனுஷா விஜய்குமார் தயாரித்துள்ள சைரன் விறுவிறுப்பான ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர்.