L2: எம்புரான் சினிமா விமர்சனம் :​ ‘எல் 2: எம்புரான்’ அரசியலும், மதமும் கலந்த உணர்வுப்பூர்வமான அதிரடி திரைப்படம் | ரேட்டிங்: 3/5

0
2111

L2: எம்புரான் சினிமா விமர்சனம் :​ ‘எல் 2: எம்புரான்’ அரசியலும், மதமும் கலந்த உணர்வுப்பூர்வமான அதிரடி திரைப்படம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
மோகன்லால் குரேஷி அபிராம் – ஸ்டீபன் நெடும்பள்ளி
இளம் குரேஷி ஆப்ராம் – ஸ்டீபன் நெடும்பள்ளியாக பிரணவ் மோகன்லால்
சயீத் மசூத் ஆக பிருத்விராஜ் சுகுமாரன்
இளம் சயீத் ஆக கார்த்திகேயா தேவ்
பால்ராஜாக அபிமன்யு சிங்
ஜதின் ராம்தாஸாக டோவினோ தாமஸ்
பிரியதர்ஷினி ராம்தாஸாக மஞ்சு வாரியர்
மைக்கேல் மெனுஹினாக ஆண்ட்ரியா திவாடர்
போரிஸ் ஆலிவராக ஜெரோம் சூஃபிளின்
கோவர்த்தனாக இந்திரஜித் சுகுமாரன்
இளம் சயீத் ஆக கார்த்திகேய தேவ்
கார்த்திக் வேடத்தில் கிஷோர்
முன்னாவாக சுகந்த் கோயல்
சஜனசந்திரனாக சுராஜ் வெஞ்சாரமூடு
கபுகாவாக எரிக் எபோனே
சுபத்ரா பென்னாக நிகத் கான்
அப்பா நெடும்பள்ளியாக சஃபாசில்
பெருஞ்சேரி கேசவ ராம்தாஸாக சச்சின் கெடேகர் – “பிகேஆர்”
மகேஷ் வர்மாவாக சாய்குமார்
முருகனாக பைஜு சந்தோஷ்
பி.எஸ்.பீதாம்பரனாக நந்து
ஜான்வியாக சானியா ஐயப்பன்
சத்யஜித் சர்மா மசூத்
ஜாகீர் மசூத் ஆக ஓசியேல் ஜிவானி
ஹனியாவாக ஐஸ்வர்யா ஓஜா
சுரையா பீபியாக நயன் பட்
பஹிஜா பேகமாக சுபாங்கி லட்கர்
ராபர்ட் மெக்கார்த்தியாக அலெக்ஸ் ஓ’நெல்
செர்ஜி லியோனோவாக மிகைல் நோவிகோவ்
முத்துவாக முருகன் மார்ட்டின்
மேடயில் ராஜனாக சிவாஜி குருவாயூர்
மணியாக மணிக்கூத்தன்
அருந்ததி சஞ்சீவாக நைலா உஷா
சஞ்சீவ் குமாராக கிஜு ஜான்
சலாபத் ஹம்சாவாக பெஹ்சாத் கான்
சுமேஷாக அனீஷ் ஜி.மேனன்
ஸ்ரீலேகாவாக ஷிவதா
என ஜெய்ஸ் ஜோஸ் சேவியர்

படக்குழுவினர் :
இயக்குனர் – பிருத்விராஜ் சுகுமாரன்
தயாரிப்பாளர் – ஆண்டனி பெரும்பாவூர்
தயாரிப்பாளர் – கோகுலம் கோபாலன்
தயாரிப்பு – ஸ்ரீ கோகுலம் மூவிஸ், ஆசிர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட்
எழுத்தாளர் – முரளி கோபி
ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ்
இசை – தீபக் தேவ்
எடிட்டர் – அகிலேஷ் மோகன்
நிர்வாக தயாரிப்பாளர்கள் – சுரேஷ் பாலாஜே, ஜார்ஜ் பயஸ்
திட்ட வடிவமைப்பு – பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – சித்து பனக்கல்
கலை இயக்குனர் – மோகன்தாஸ்
டிரெய்லர் கட்ஸ் – டான் மேக்ஸ்
முதன்மை இணை இயக்குனர்- வாவா
கிரியேட்டிவ் டைரக்டர் – நிர்மல் சஹாதேவ்
ஒலி வடிவமைப்பு – எம் ஆர் ராஜகிருஷ்ணன்
நிதிக் கட்டுப்பாட்டாளர் – மனோகரன் கே பையனூர்
அதிரடி – ஸ்டண்ட் சில்வா
ஆடை – சுஜித் சுதாகரன்
ஒப்பனை – ஸ்ரீஜித் குருவாயூர்
ஏகுஓ மேற்பார்வையாளர் – பிரவீன் காண்டா
ஏகுஓ – லுகுஓ ஸ்டுடியோஸ், லாபிரிந்த் ஸ்டுடியோஸ்- மும்பை, பைனரி சர்க்கஸ், பேப்பர் பிளேன், ஐடென்ட், டிடிஎம்
டிஐ – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
வண்ண கலைஞர் – விவேக் ஆனந்த்
ஸ்டில் – சினாட் சேவியர்
வடிவமைப்பு – ஆனந்த் ராஜேந்திரன் (ஒளி கலைஞர்)
மக்கள் தொடர்பு – யுஐஆ

ஈராக்கில் போருக்குப் பிந்தைய காலத்தில் ‘பேய் நகரம்’ என்று அழைக்கப்படும் ‘கராக்கோஷ்’ என்ற இடத்தில் ஒரு ரகசிய இராணுவப் அதிரடி பணி தவறாக போவதோடு படம் தொடங்குகிறது. கதை மேற்கு இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த ஒரு வகுப்புவாத வன்முறையை காண முடிகிறது. எம்புரான் இரண்டு ஸ்டீபன் நெடும்பள்ளி அல்லது அப்ராம் குரேஷி (மோகன் லால்) மற்றும் சயீத் மசூத் (பிருத்விராஜ் சுகுமாரன்), அவர்கள் தங்கள் குடும்பங்களை பறித்த ஒரு கொடூரமான பின்னணியைக் கூறுகிறது. சயீத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பஜ்ரங்கி (அபிமன்யு சிங்) என்ற தலைவரின் கீழ், ஒரு புதிய, வளர்ந்து வரும் அரசியல் கட்சியின் கீழ், வகுப்புவாத மோதல்களில் கலவரங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, காட்சி கேரளாவிற்கு மாறும் போது, கேரள முதல்வர் ஜதின் ராம்தாஸ் (டோவினோ தாமஸ்) தனது கட்சியுடனும் சகோதரி பிரியதர்ஷினியுடனும் (மஞ்சு வாரியர்) முரண்படுகிறார். முதல்வர் ஜதின் ராம்தாஸ் ஊழல் மற்றும் அவரது மறைந்த தந்தை ராம்தாஸின் (சச்சின் கேடேகர்) மதிப்புகளை நிலைநிறுத்த தவறியதாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். தனது அரசியலில் ஒரு மாற்றத்தை செய்வதாக ஒரு ஆச்சரியமான அறிவிப்பு வெளிப்படுத்துகிறார். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க, தனது கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்க துணிச்சலாக முடிவு செய்கிறார், பாலராஜ் என்றும் அழைக்கப்படும் பாபா பஜ்ரங்கியுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். இந்த செயல் கேரளா வகுப்புவாத அரசியலில் மூழ்கப் போகிறது என்று அவரது சகோதரி பிரியதர்ஷினி ராம்தாஸ் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறார். இதற்கிடையில், ஸ்டீபன் நெடும்பள்ளி என்றும் அழைக்கப்படும் குரேஷி அப்ராம், சர்வதேச அளவில் போதைப்பொருள் கும்பலான கபூகாவுடனான பிரச்சனைகள் மற்றும் கேரள முதல்வர் ஜதின் ராம்தாஸின் ஊழல் ஆட்சியை சரி செய்ய களமிறங்குகிறார். அவரது வருகை கேரளாவின் அரசியல் நிலப்பரப்பை எவ்வாறு மாற்றுகிறது? பாலராஜுடனான அவரது தனிப்பட்ட மோதல் என்ன? சயீத் மசூத்துடன் பால்ராஜுக்கு எவ்வாறு தொடர்பு? படம் இந்தக் கேள்விகளை அவிழ்க்கிறது.

மோகன்லால் ஸ்டீபன் நெடும்பள்ளி மற்றும் அப்ராம் குரேஷி ஆகிய இரு வேடங்களிலும் அசத்தலான தோற்றத்தில் பார்வையாளர்களைக் கவர்கிறார். முதல் ஒரு மணி நேரத்தில் அவர் தோன்றவில்லை என்றாலும், அவரது தாமதமான வருகை திரையை மின்னூட்டுகிறது, அவரது அமைதியான ஆனால் அதிகாரப்பூர்வமான சித்தரிப்பு, கவர்ச்சிகரமான இருப்புடன் படத்தை முன்னோக்கி நகர்த்துகிறது. அவரது நடை, கோபம், வெறுப்பு, சோகம் இவை அனைத்தையும் உடல்மொழி மற்றும் தீர்க்கம் நிறைந்த கண்கள் மூலம் சிரமமின்றி அசத்தலாக வெளிப்படுத்துகிறார், சண்டைக் காட்சிகளில் பிரகாசிக்கிறார், அதற்கு அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது.

பிருத்விராஜ் சுகுமாரனுக்கு குறைந்த திரை நேரம் மட்டுமே உள்ளது, அதை அவர் கச்சிதமாக செய்துள்ளார்.

டோவினோ தாமஸ், அவரது கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறார்.

மஞ்சு வாரியரின் திரை நேரம் குறைவாக இருந்தாலும் தனது நடிப்பால் ஈர்க்கப்படுகிறார், இறுதிப் பகுதிகளில் ஒரு வலுவான இருப்பைக் கொண்டு வருகிறார்.

அச்சுறுத்தும் பால்ராஜ் பஜ்ரங்கியாக அபிமன்யு சிங் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் கிஷோர் ஒரு சட்ட அமலாக்க அதிகாரியாக சில வாய்ப்புகளை பெறுகிறார்.

மேலும் வெளிநாட்டு மற்றும் அனைத்து துணை நடிகர்கள் தங்களது பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு உள்ளனர்.

தீபக் தேவின் இசை அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகளுடன் சரியாகப் பொருந்துகிறது. பின்னணி இசை, போதுமானதாக இருந்தாலும், முக்கிய தருணங்களில் கொஞ்சம் சத்தமாக இருந்தது.

அதிரடி காட்சிகள் ஈர்க்கக்கூடிய அளவில் பொருத்தப்பட்டுள்ளன. சர்ச் சண்டை காட்சி, மோகன்லால் பிரமாண்டமான நுழைவு மற்றும் பல தருணங்கள் ஹாலிவுட் பாணியில் செழுமையுடன் செயல்படுத்தப்படுகின்றன, இது காட்சி ரீதியாக மூழ்கடிக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

சுஜித் வாசுதேவின் ஒவ்வொரு பிரேமும் செழுமையை வெளிப்படுத்துகிறது, கேமரா வொர்க் வேகமான மற்றும் மென்மையான காட்சிகளை அற்புதமாக சமநிலைப்படுத்துகிறது.

இருப்பினும், எடிட்டிங் கூர்மை இல்லாததால், படத்தின் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன, அவை சில நேரங்களில் மெதுவாகவும் நீட்டிக்கப்பட்ட தாகவும் உணர வைக்கின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட காட்சிகள் கூட நீண்ட கதைசொல்லல் காரணமாக அவற்றின் தாக்கத்தை இழக்கின்றன.

லூசிஃபர் படத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றிய பிடிமான ஆழம், எல் 2: எம்புரானில் முரளி கோபியின் எழுத்து நடையில் உணர்ச்சி மையக்கரு பலவீனமாக உள்ளது.
இயக்குனர் பிருத்விராஜ் சுகுமார் இயக்குநராக, ஒரு நடிகராக, பல்வேறு படங்களின் மூலம் தனது திறமையை நிரூபித்து உள்ளார். ஆனால் இயக்குநராக தனது மூன்றாவது படைப்பான ‘எல் 2: எம்புரான்’ பல துணைக் கதைக்களங்கள், அதில் சர்வதேச அளவில் போதைப்பொருள், மதமும் மற்றும் அரசியல் திருப்பங்கள் நிறைந்ததால் இந்த கதை ஆழமான மட்டத்தில் ஈடுபடத் தவறிவிட்டது. ஆனால், அதன் விளக்கக்காட்சியில் அது பிரமாண்டமாக உள்ளது மற்றும் அதிக வணிக ரீதியான பாதையை எடுக்கிறது. லூசிஃபர் எப்படி முடிகிறது என்பதைப் போலவே, ‘எல் 2: எம்புரான் பகுதி 3 -க்கான லீடுடன் முடித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்கள் ஆஷிர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன் மற்றும் லைகா புரொடக்ஷன் ஏ.சுபாஸ்கரன் ஆகியோர் பிரம்மாண்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இது ஒரு ஹாலிவுட் தயாரிப்பதைப் போல பல்வேறு சர்வதேச இடங்களில் காட்சிகள் விரிவடைய செய்து கதையில் கோட்டை விட்டு உள்ளார்கள்.

மொத்தத்தில் ‘எல் 2: எம்புரான்’ அரசியலும், மதமும் கலந்த உணர்வுப்பூர்வமான அதிரடி திரைப்படம்.