விஜயானந்த் விமர்சனம் : விஜயானந்த் வாழ்க்கை வரலாறு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள்: நிஹால் ராஜ்புத், ஸ்ரீ அனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே.
இசையமைப்பாளர்: கோபி சுந்தர் சி
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி
எடிட்டர்: ஹேமந்த் குமார் டி
தயாரிப்பாளர்: டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர்
தயாரிப்பு – விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர்: ரிஷிகா சர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
லாஜிஸ்டிக்ஸ் நிறுவனர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விஜயானந்த் படத்தின் மூலம் வி.ஆர்.எல். பிலிம்ஸ் திரைப்படத் தயாரிப்பு தொடங்கி தயாரித்துள்ள படத்தை பற்றி பார்ப்போம்.விஜய் (நிஹால் ராஜ்புத்) என்ற 19 வயது இளைஞன், தனது தந்தை பி ஜி சங்கேஷ்வரின் (அனந்த நாக்) அச்சகத்தில் பணிபுரிந்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். தந்தை பி ஜி சங்கேஷ்வரின் (அனந்த் நாக்) விருப்பத்திற்கு மாறாக, அவர்களது பிரிண்டிங் பிரஸ்ஸிற்காக ஒரு நவீன தானியங்கி அச்சு இயந்திரத்தை தன்னுடன் கொண்டு வருவதைக் கொண்டு படம் தொடங்குகிறது. புதிய இயந்திரத்தின் மூலம் அவர்களின் வணிகம் எதிர்பார்த்தபடி செழித்தோங்குகிறது விஜய் உயர்ந்த இலக்கை அடையத் தொடங்குகிறார். ஆனால் விஜய் தனது தனிப்பட்ட வளர்ச்சியில் மகிழ்ச்சியடையாமல் தனது பரம்பரையான புத்தக வெளியீட்டுத் தொழிலை விட்டுவிட்டு, போக்குவரத்துத் தொழிலைத் தொடங்குகிறார். அவர் சரக்கு போக்குவரத்து துறையில் மற்றொரு வணிகத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு ஒரு டிரக்கை வாங்க முயல்கிறார். இந்த முறை மீண்டும் அவரது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக விஜய் வலுவான மன உறுதியுடன் செயல்பாட்டாலும் அவர் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். தொடர் முயற்சிகள், நண்பர்களின் ஆதரவு மற்றும் உதவிக்கு பிறகு விஜய் தனது தொழிலை நிறுவிகிறார். அரசியலில் அடியெடுத்து வைக்கும் அளவுக்கு நன்கு அறியப்பட்ட அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் ஒரு பத்திரிகையையும் தொடங்கி மாநிலத்தின் மிகவும் வெற்றிகரமான செய்தித்தாளை நடத்துகிறார். அவர் வாழ்க்கையில் எப்படி பல தடங்கல்களை கடந்து சாதித்தார் என்பதுதான் படத்தின் கதை.
இசையமைப்பாளர்: கோபி சுந்தர் சி
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி
எடிட்டர்: ஹேமந்த் குமார் டி
தயாரிப்பாளர்: டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர்
தயாரிப்பு – விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர்: ரிஷிகா சர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்


செய்தித்தாள் உரிமையாளராக நடித்திருக்கும் பிரகாஷ் பெலவாடி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.



