வல்லவன் வகுத்ததடா சினிமா விமர்சனம் : வல்லவன் வகுத்ததடா – க்ரைம் டிராமா திரில்லர் | ரேட்டிங்: 3/5
போகஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விநாயக் துரை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், ரெஜின் ரோஸ், அனன்யா மணி, விக்ரம் ஆதித்யா, சுவாதி மீனாட்சி, அருள் டி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜய் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு AIM.
கந்துவட்டிக்காரன் குபேரனாக நடித்திருக்கும் விக்ரம் ஆதித்யா நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளார்.
தேஜ் சரண்ராஜ் மற்றும் ரெஜின் ரோஸ் இருவரும் திருடர்களாக தங்களது கதாபாத்திரத்திற்கு நேர்த்தியான நடிப்பு வழங்கியதுடன் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமணி கதாபாத்திரத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன் தனக்கே உண்டான மேனரிசத்தோடு பல்வேறு உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
டாக்ஸி ஓட்டும் இளம்பெண் சுபாவாக சுவாதி மீனாட்சி மற்ற 5 கதாபாத்திரங்களில் இவர் மட்டும் தான் நேர்மறை கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமாக நடித்துள்ளார்.
பணத்தேவையால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படும் ஆறு பேரைச் சுற்றியே வல்லவன் வகுத்ததடா சுழல்கிறது. ஹைப்பர் லிங்க் பாணியை பின்பற்றி திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து 104 நிமிடங்களில் இயக்குனர் விநாயக் துரை தனது கதையை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் போகஸ் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் வல்லவன் வகுத்ததடா – க்ரைம் டிராமா திரில்லர்.