வருணன் சினிமா விமர்சனம் : வருணன் – அலுப்பான கதையால் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டது | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் :
ராதாரவி – அய்யாவு
ஜானாக சரண்ராஜ்
தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ்
சிட்டுவாக கேப்ரியேலா
அக்னியாக ஹரிப்ரியா
டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன்
மருதுவாக பிரியதர்சன்
மதுரைவீரனாக ஜீவா ரவி
ராணியாக மகேஸ்வரி
யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன்
ஹைடுவாக ஹைட் கார்டி
நண்பராக கௌசிக்
ரம்யாவாக கிரண்மாய்
கமுதியாக தும்கன் மாரி
துளசியாக குழந்தை மகிழ்ச்சி
சீமாவாக ஐஸ்வர்யா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு: யாக்கை பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: கார்த்திக் ஸ்ரீதரன்
இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ்
இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன்
இயக்குனர்: ஜெயவேல்முருகன்
இசையமைப்பாளர்: போபோ சஷி
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீராம சந்தோஷ்
எடிட்டிங்: யு.முத்தையன் டிஎஃப்டி
அதிரடி இயக்குனர்: தினேஷ் சுப்பராயன்
கலை இயக்குனர்: பது
நடனம்: தினேஷ், பாப்பி
விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர்
ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
வடசென்னையின் ஒரு பகுதியில் அய்யாவு (ராதா ரவி), ஜான் (சரண்ராஜ்) இருவரும் தண்ணீர் கேன் வியாபாரிகள். இருவருக்கும் தொழில் போட்டி இருந்தாலும் அவரவர் வடிக்கையாளர்களுக்கு சுமுகமாக தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்கள். தில்லை (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) மற்றும் மருது (பிரியதர்ஷன்) ஆகியோர் அய்யாவுவிடம் வேலை பார்த்து வருபவர்கள். ஆனால், ஜானின் பேராசை கொண்ட மனைவி ராணி (மகேஸ்வரி) மற்றும் அவரது மைத்துனர் டப்பா (சங்கர்நாக் விஜயன்) ஆகியோர் எப்படியாவது அய்யாவுவின் தொழிலைச் சரிக்க நேரம் பார்த்து நாசம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தில்லை மற்றும் மருதுவிடம் அடிக்கடி வம்பிழுக்கின்றனர். அவர்கள் தண்ணீர் கேன்களுக்கு அடியில் சட்டவிரோத சாராயம் (சுண்டகஞ்சி) விற்று பணக்கார வாழ்க்கையை நடத்த முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் ஒரு ஊழல் போலீஸ்காரர் மதுரைவீரன் (ஜீவா ரவி) ஜான் கோஷ்டியை ஆதாரத்துடன் பிடிக்க எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இரு கோஷ்டி மோதல் துரோகங்கள் மற்றும் இறுதியில் கொலை வரை விரிவடைகிறது. இறுதியில் இரு கோஷ்டிகள் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
சாந்தமான குணம் படைத்த முதலாளியாக, அதே நேரத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் அய்யாவு கதாபாத்திரத்தில் ராதாரவி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்.
ஜான்னாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, க்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, ரம்யாவாக கிரண்மாய், கமுதியாக தும்கன் மாரி, துளசி, உட்பட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு உரிய நடிப்பைத் தந்திருக்கிறார்கள் என்றாலும் ஆழம் இல்லாத திரைக்கதையால் அவர்களது உழைப்பு பெரிய அளவில் எடுபட வில்லை.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஸ்ரீராம சந்தோஷ், ராயபுரம் பகுதியின் மிகக் குறுகலான தெருக்கள், சந்துகள், வீடுகள், குடிசைப் பகுதிஎன அனைத்தையும் கச்சிதமாக காட்சிபடுத்தி இருப்பது சிறப்பு.
போபோ சசியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தொகுப்பாளர் யு.முத்தையன் எடிட்டிங் ஆழம் இல்லாத திரைக்கதையை முடிந்த அளவு நகர்த்த முயற்சித்துள்ளனர்.
குழப்பத்தில் தத்தளிக்கும் உலகில், தண்ணீருக்கான ஒரு எளிய மோதல் இரக்கமற்ற போராக மாறி, உலகளாவிய போரின் தீப்பிழம்புகளை தூண்டுகிறது.போட்டி தண்ணீர் விற்பனையாளர்கள் தங்கள் வர்த்தகத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் போது, தொழில் போட்டியையும் அதனால் விளையும் வன்மத்தையும் வளர்க்கிறது. இதன் அடிப்படையில், இயக்குனர் ஜெயவேல் முருகன் இரண்டு போட்டி தண்ணீர் விநியோகஸ்தர்களுக்கு இடையே ஒரு பிராந்திய போரை அமைத்து அதில் காதல், மோதல், அடிதடி, கொலை, துரோகம் என அனைத்தும் வட சென்னையின் வாழ்க்கையின் பின்னணியில் அமைக்கப்பட்ட முற்றிலும் எந்த ஒரு புதுமையும் இல்லாத திரைக்கதையில் சித்தரித்துள்ளார்.
மொத்தத்தில் யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கும் வருணன் – அலுப்பான கதையால் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டது.