லக்கி பாஸ்கர் சினிமா விமர்சனம் : லக்கி பாஸ்கர் வெகுஜன ரசிகர்களை கவரும் ஒரு சிறந்த தீபாவளி விருந்தாகும் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள் : துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சச்சின் கெடேகர், டின்னு ஆனந்த், ராம்கி, சாய் குமார், ரித்விக், ராஜ்குமார் காசிரெட்டி, சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர், ராங்கி, ஹைப்பர் ஆதி, சூர்யா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் : நவீன் நூலி
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
தயாரிப்பு : சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
எழுதி இயக்குகியவர் : வெங்கி அட்லூரி;
மக்கள் தொடர்பு : டி ஒன், சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
துல்கர் சல்மானின் நடிப்பு பாஸ்கர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு எளிய இளைஞரிலிருந்து ஒரு பேராசை கொண்ட அதி பணக்காரன் வரை, எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளும் இல்லாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தனது உணர்ச்சிகளை பொறுத்தவரை பல பரிமாணங்கள் கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும் உணர்ச்சிகளை உடல் மொழி மாற்றங்கள் மூலம் சித்தரிக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்தின் விரக்தியை மிகவும் நம்பத்தகுந்த வகையில் செயல்படுத்தியிருக்கிறார், பின்னர் ஒரு புத்திசாலித்தனமான ஒருவராக மாறும் காட்சிகளில் அசால்டான நடிப்பில் கடந்து செல்வது மிகவும் ஈர்க்கிறது.
மீனாட்சி சவுத்ரி கதாபாத்திரம் மனதைக் கவரும் கண்ணியமான வேடம். பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஒரு வசீகரிக்கும் நடிப்பை வழங்குகிறார்.
மகன் கார்த்திக்காக ரித்விக், அந்தோணியாக ராம்கி, பாஸ்கரின் நண்பராக சம்பாவாக ராஜ்குமார் காசிரெட்டி சிபிஐ அதிகாரியாக சாய்குமார் அப்பாவாக வந்த சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர், டின்னு ஆனந்த், ராங்கி, ஹைப்பர் ஆதி, சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் படத்திற்கு கணிசமான ஆழத்தை சேர்க்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பங்களிப்பையும் ஒட்டுமொத்த திரைக்கதைக்கு ஒருங்கிணைந்ததாக உணரவைக்கிறது.
படத்தில் முகம் தெரியாத ஹர்ஷத் மெஹ்ரா என்ற கதாபாத்திரத்தை சுற்றியே முழுக்கதையும் செல்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக படம் நேர்த்தியான வெட்டுக்கள், பிரேம்கள், வசனங்கள் மற்றும் கலை வேலைப்பாடுகளுடன் மென்மையாய் உள்ளது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது மற்றும் விண்டேஜ் உணர்வை சேர்க்கிறது. நவீன் நூலி எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் கதைக்களத்துடன் சரியான வகையில் உள்ளது.
“ஒரு நாளில் அரை மணி நேரம் என் விருப்பப்படி நடந்ததில்லை.. என் வாழ்நாள் முழுவதும் என்னால் உட்கார்ந்து அழ முடியாது”.
‘நான் பொய் சொல்லவில்லை. உண்மையாகவே நான் புத்திசாலித்தனமாகச் சொன்னேன்’.
‘இது இந்தியா. ஒரு பொருள் வேண்டுமென்றால் அதை காசு கொடுத்து வாங்க வேண்டும். மரியாதை வேணும்னா காசு மேல காட்டணும்’ போன்ற வசனங்கள் கதைக்கு யதார்த்த உணர்வைச் சேர்க்கின்றன.
பிரபல பங்குத் தரகர் ஹர்ஷத் சாந்திலால் மேத்தா (எ) ஹர்ஷத் மேத்தா சம்பந்தப்பட்ட 1992 ஆம் ஆண்டு பத்திர மோசடி, பங்குச் சந்தை சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது மற்றும் நாட்டின் வங்கித் துறையில் முறையான ஓட்டைகளை வெளிப்படுத்தியது. பங்கு வர்த்தகம் பல ஆண்டுகளாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) ஒழுங்குமுறை அதிகாரங்களின் விரிவாக்கத்துடன் பாதுகாப்பானதாக மாறினாலும், நாட்டின் வங்கி அமைப்பில் உள்ள ஓட்டைகள், வங்கிகளில் இருந்து பெறப்பட்ட சட்டவிரோத நிதியை பயன்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையில் பணக்கார வணிகர்கள் மற்றும் தனிநபர்களால் நிதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்கு ஹர்ஷத் மேத்தா கையாண்டார். பம்பாயை தளமாகக் கொண்ட பங்குத் தரகர் ஹர்ஷத் மேத்தா, 1992 ஆம் ஆண்டு பத்திர மோசடியில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு 1990 களின் முற்பகுதியில் தலால் தெருவில் நன்கு அறியப்பட்ட பெயராக மாறினார். ஹர்ஷத் மேத்தாவின் நிஜ வாழ்க்கைக் கதையிலிருந்து உத்வேகம் பெற்று வங்கி மோசடியைப் பின்னணியாகக் கொண்டு தனித்துவமான திருப்பத்துடன், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் தொடர்பான போராட்டங்கள், நிதி மோசடிகள், வங்கி ரசீது, பங்குச்சந்தை, பங்குகள் மோசடி, ஹவாலா மற்றும் வசீகரிக்கும் சதி திருப்பங்கள், வலுவான வசனங்கள் என ஈர்க்கக்கூடிய திரைக்கதையில் விவாதித்து மற்றும் சுவாரஸ்யமான காட்சி அமைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தை உயிர்ப்புடன் நகர்த்தி உள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
மொத்தத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள லக்கி பாஸ்கர் வெகுஜன ரசிகர்களை கவரும் ஒரு சிறந்த தீபாவளி விருந்தாகும்.