Site icon Chennai City News

ராக்கெட் டிரைவர் சினிமா விமர்சனம் : ராக்கெட் டிரைவர் வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் கலாமின் காலப்பயணம் அனைவரையும் கவரும் என்பது உறுதி | ரேட்டிங்: 3/5

ராக்கெட் டிரைவர் சினிமா விமர்சனம் : ராக்கெட் டிரைவர் வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் கலாமின் காலப்பயணம் அனைவரையும் கவரும் என்பது உறுதி | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
பிரபாவாக விஸ்வத்
கமல் வேடத்தில் சுனைனா
ஏபிஜே அப்துல் கலாமாக நாக விஷால்
சாஸ்திரியாக காத்தாடி ராமமூர்த்தி
ஆனந்த குமாரசாமியாக ஜெகன்
சவரி முத்துவாக ராமச்சந்திரன் துரைராஜ்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஸ்ரீராம் ஆனந்தசங்கர் எழுதி இயக்கியுள்ளார்
இசை: கௌசிக் கிரிஷ்
தயாரிப்பாளர்: அனிருத் வல்லப்
பேனர்: ஸ்டோரீஸ் பை தி ஷோர்
ஒளிப்பதிவாளர்: ரெஜிமெல் சூர்யா தாமஸ்
எடிட்டர் : இனியவன் பாண்டியன்
ஆடை வடிவமைப்பாளர்: ஷில்பா ஐயர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரேம் கருந்தமலை
இணை எழுத்தாளர்: அக்ஷய் பூல்லா
உரையாடல் எழுத்தாளர்: பிரசாந்த் எஸ்
தயாரிப்பு நிர்வாகி: செல்வேந்திரன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: யுவராஜ் பி.வி
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்

இயற்பியல் மேதையான பிரபா (விஸ்வத்) ஒரு அறிவியல் பட்டதாரி. தனது தந்தையால் மேல் படிப்புக்கு உதவ இயலாமையால் சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டுநராக மாறுகிறார்.அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாமை தனது முன்மாதிரியாகக் கருதுகிறார். அவர் உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதால்  கலாமைப் பற்றி கனவு காண்கிறார் மற்றும் அவரது ஆட்டோவில் அவரது உருவப்படம் உள்ளது. ஒரு நல்ல நாளில், ராமேஸ்வரத்தில் இருந்து ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்று கூறிக்கொள்ளும் 17 வயது இளைஞனை (நாக விஷால்) அவர் சந்திக்கும் போது அவரது வாழ்க்கை ரோலர்-கோஸ்டர் சவாரியாக மாறுகிறது. 1948 முதல் 2023 வரை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து பயணத்தின் வரும் கலாமின் நேர பயணத்திற்கு காரணம் என்ன என்பதை படத்தின் மீதிக்கதை.

பிரபாவாக விஸ்வத் கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான பாத்திரத்திலும்,நாக விஷால் இளம் வயது அப்துல் கலாமாக நடித்திருப்பது படத்தின் ஹைலைட், அவரது சித்தரிப்பு சிறு வயதில் அப்துல் கலாம் எப்படி இருந்திருப்பார் என்று தோன்ற வைக்கிறது.அவர் என்ட்ரி கொடுத்த பின்னர் நம்மையும் அவரது பயணத்துடன் அழைத்து செல்கிறார்.

காத்தாடி ராமமூர்த்தி, கலாமின் நிஜ வாழ்க்கை நண்பர் சாஸ்திரியாக, இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் கலகலப்புடன் அவர்கள் நடிப்பு படத்தை மேலும் முன்னேற்றுகிறது.

கமலாக சுனைனா, ஆனந்த குமாரசாமியாக ஜெகன், சவரி முத்துவாக ராமச்சந்திரன் துரைராஜ் என அனைத்து துணை கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பக்க பலமாக உள்ளனர்.

இசையமைப்பாளர் கௌசிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்களிப்பு கதை சொல்லலுக்கு வலு சேர்த்து இருக்கிறது.

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் மையமாக வைத்து, அறிவியலையும் தத்துவத்தையும் ஒருங்கிணைத்த காலப்பயணம் செய்யும் ஃபேண்டஸியில் நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸில், வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பெரிய சாதனைகளில் இல்லை, சிறிய மகிழ்ச்சியில் இருக்கிறது என்பதை திரைக்கதையில் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர். இப்படி ஒரு கதைக்களத்தை தேர்வு செய்த தயாரிப்பாளர் அனிருத் வல்லபை பாராட்டலாம்.

மொத்தத்தில் ஸ்டோரீஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரித்திருக்கும் ராக்கெட் டிரைவர் வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் கலாமின் காலப்பயணம் அனைவரையும் கவரும் என்பது உறுதி.

Exit mobile version