யானை முகத்தான் திரைவிமர்சனம் : யானை முகத்தான் வசீகரிக்க தவறிவிட்டான் | ரேட்டிங்: 2/5
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. பேண்டஸி காமெடி திரைப்படமான இதை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். இப்படத்தில் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பெராடி, கிரேன் மனோகர், உதய் சந்திரா, நாக விஷால், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா (“மருது” பாடி), என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு நிறுவனம் : தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
எழுத்து – இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர்
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : சைலோ சத்யன்
தயாரிப்பு மேற்பார்வை : சுனில் ஜோஸ்
தயாரிப்பு : எம் ஜே பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்
யானை முகத்தான் திரைப்படச் சுருக்கம்: ஆட்டோ ஓட்டுநரும், விநாயகப் பெருமானின் தீவிர பக்தருமான கணேசன், தனது இடத்தில் ஒரு சிலை காணாமல் போன பிறகு விசித்திரமான விஷயங்களை அனுபவிக்கத் தொடங்குகிறார். கணேசன் தனது வாழ்க்கையில் என்ன என்ன தவறு செய்தார் என்பதை ஒருபோதும் யோசித்ததில்லை? நகரத்தில் இலக்கில்லாமல் நண்பனுடன் சேர்ந்து குடித்து, சுற்றித் திரிந்து தனக்குத் தெரிந்த அனைவருக்கும் கடன்பட்டிருக்கிறார். தீவிர விநாயகர் பக்தரான கணேசன், தனது ‘துன்பங்களுக்கு’ இறைவனைக் குறை கூறிக் கொண்டே இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்கும் போதெல்லாம், அவர் விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்கிறார், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் பிரச்சினைகளை இரட்டிப்பாக்கு மாறும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியும் வேண்டிக் கொள்கிறார். இது அவரது வாடிக்கையாக இருந்தபோதிலும், அவரது வீட்டில் உள்ள விநாயகர் சிலை ஒன்று கண்ணுக்கு தெரியாததாக மாறும்போது அவரது வாழ்க்கை மோசமாகிறது. அவரது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மைக்கேல் (கருணாகரன்) மற்றும் மல்லிகா (ஊர்வசி) அவரை நம்ப மறுத்தாலும், அவரது வாழ்க்கையில் மனித வடிவில் (யோகி பாபு) அவர் முன் தோன்றி கணேசன் ஒரு நாள் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக வாழ வேண்டும் என்கிறார். கடவுளே தனக்கு சவால் விட்ட பிறகு கணேசன் அதன்படி நடக்க ஆரம்பிக்கிறான். கணேசன் விசித்திரமான நிகழ்வுகள் அனுபவிக்கத் தொடங்குகிறார். அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
தயாரிப்பு நிறுவனம் : தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
எழுத்து – இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர்
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : சைலோ சத்யன்
தயாரிப்பு மேற்பார்வை : சுனில் ஜோஸ்
தயாரிப்பு : எம் ஜே பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்


விநாயகராக வரும் யோகிபாபு அவ்வப்போது திரையில் தோன்றுவது, அவரது கதாபாத்திரம் சரியாக பெரிய அளவில் வடிவமைக்கப்படவில்லை.
வீட்டு உரிமையாளர் மல்லிகா அக்காவாக ஊர்வசி, நண்பனாக கருணாகரன் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்து ரசிக்க வைக்கிறார்கள்.
கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. பரத் சங்கர் இசை மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.
மெல்ல நகரும் சைலோ சத்யனின் படத்தொகுப்பு படம் பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது.
பிறருக்கு உதவுவதில், மனத்தூய்மையுடன் மக்களை அணுகுவதில் இறைவன் இருக்கிறான். ‘கடவுளைத் தேடிப் போகாதே, அதை உனக்குள்ளேயே கண்டுபிடி’ என்ற அடிப்படைக் கருவை, காமெடி ஜானரில் கதையை கொண்டு செல்ல நினைத்த இயக்குனர் ரெஜிஷ் மிதிலா திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் எம் ஜே பாரதி தயாரித்திருக்கும் யானை முகத்தான் வசீகரிக்க தவறிவிட்டான்.