பயமறியா பிரம்மை விமர்சனம் : பயமறியா பிரம்மை பார்வையாளர்களை எளிதில் சலிப்படையச் செய்கிறது | ரேட்டிங்: 2/5

0
294

பயமறியா பிரம்மை விமர்சனம் : பயமறியா பிரம்மை பார்வையாளர்களை எளிதில் சலிப்படையச் செய்கிறது | ரேட்டிங்: 2/5

சிக்சிடி நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் படம் பயமறிய பிரம்மை

இதில் ஜடி, குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், விஸ்வாந்த், ஹாரீஷ் ராஜு, ஜாக்ராபின், வினோத் சாகர், ஏகே, திவ்யா கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-பிரவீண் மற்றும் நந்தா, இசை-கே, எடிட்டர் – அகில், பிஆர்ஒ-யுவராஜ்

96 பேரைக் கொன்ற ஜெகதீஷ், எழுத்தாளர் கபிலன் சிறைக் கம்பிகளின் இருபுறமும் அமர்ந்து உரையாடலில் ஈடுபடும் இரண்டு கதாபாத்திரங்களுடன் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கதை ஒரு எழுத்தாளரைப் பற்றியது, கபிலன் தனது முதல் புத்தகத்தை 1987 இல் எழுதிய போது, அவரது எழுத்து மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது வாசகர்களை அவரது புத்தகங்களின் கதாபாத்திரங்களாகக் கற்பனை செய்ய வைக்கிறது. இந்த எழுத்தாளர் 96 கொலைகளைச் செய்த ஜெகதீஷ் என்கிற ஒரு மோசமான கொலைகாரனின் வாழ்க்கையை தனது அடுத்த புத்தகத்தின் கருப்பொருளாக மாற்றத் தேர்வு செய்கிறார். அவர் தனது மனதைப் புரிந்து கொள்வதற்காக சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்திக்கிறார். எழுத்தாளர் கபிலன் சிறை கம்பிகளுக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருக்கையில், 96 கொலைகளைச் செய்த ஜெகதீஷ் கம்பிகளுக்குப் பின்னால் தரையில் அமர்ந்து தனது குற்றங்களை ஒரு கலைப் படைப்பாகக் கருதுவதாகவும், அவற்றை ஒரு புத்தகம் எழுதும் எழுத்தாளருடன் ஒப்பிடுகிறான். அதன் பிறகு கபிலன் ஜெகதீஷின் கடந்த காலத்தை ஆழமாக ஆராய்ந்த போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் அறிமுக நாயகன் ஜேடி சிறை கம்பி உள்ளேயே உட்கார்ந்த இடத்திலேயே தான் செய்த கொலையைப் பற்றி சொல்லும் போது அலட்டல் இல்லாத நடிப்பை தந்துள்ளார். ஆனால் கதை அத்தியாயங்கள் மூலம் விரிவடையும் போது குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோர் அவரின் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலான பார்வையாளர்களுக்கு இது மிகவும் குழப்பம் அடைய செய்கிறது தவிர அவர்கள் நடிப்பு அந்த கதாபாத்திரம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

மாறனாக ஜான் விஜய் மற்றும் ஏ.கே, ஜெகதீஷின் மனைவியாக திவ்யா கணேஷ், சதீஷ் ஆக விஸ்வாந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் படி இல்லை.

எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் வினோத் சாகர் எதார்த்தமான நடிப்பை தந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பிரவீண் மற்றும் நந்தா, இசையமைப்பாளர் கே மற்றும் நேரியல் அல்லாத பாணியில் எடிட் செய்துள்ள அகில் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தெளிவான வேகம் இல்லாத திரைக்கதைக்கு ஓரளவு உயிர் கொடுத்துள்ளனர்.

இயக்குநர் ராகுல் கபாலி அடிப்படையில் ஒரு ஓவியக் கலைஞர். அவருடைய ஓவிய அனுபவத்தை இத்திரைப்படத்தில் கொலையாளி மூலம் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவது காட்டும் சில காட்சிகளுடன் இந்தக் கதையை இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் தெளிவற்ற நான்-லீனியர் திரைக்கதையுடன் இயக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

மொத்தத்தில் சிக்சிடி நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி தயாரித்திருக்கும் பயமறியா பிரம்மை பார்வையாளர்களை எளிதில் சலிப்படையச் செய்கிறது.