படிக்காத பக்கங்கள் சினிமா விமர்சனம் : படிக்காத பக்கங்கள் – சலிப்பு | ரேட்டிங்: 2/5
எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில், முத்துக்குமார் மற்றும் செல்வம் தயாரிப்பில், மாதப்பன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த், பிரஜின், ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி ஆகியோர் நடித்திருக்கும் படம் படிக்காத பக்கங்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து இயக்கம் : செல்வம் மாதப்பன்
தயாரிப்பாளர் : செல்வம் மற்றும் முத்துக்குமார்
இசை : ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடல் வரிகள் : வைரமுத்து
ஒளிப்பதிவு : டோலி
பின்னணி இசை : எஸ் எஸ் சாயி தேவ் வி
எடிட்டர் : ஷரன் சண்முகம்
நடனம் : நோபல் ஜே.சி.கே
VFX : மூர்த்தி – டி நோட்
DI & கலவை : JGEE ஸ்டுடியோ
ஒலிப்பதிவு : நோபல்
ஆடை : சேகர்
ஒப்பனை : பிரதீப், பிரியங்கா
சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா
கலை : மஞ்சு
ஸ்டில்ஸ் : சிவு
மக்கள் தொடர்பு : குணா
ஒரு பெண் கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடி கட்டிடத்திற்குள் படபடப்பும் பயந்த முகத்துடன் செல்கிறாள். அங்கு அவள் ஒரு கொலைக்கார கும்பலால் தாக்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அங்கு கட் செய்தால் நீதிமன்றத்தில் அங்கு ஒரு பெண் நீதிபதி சட்ட நடவடிக்கைகளுக்கு நடுவில் நடிகையான ஸ்ரீஜா (யாஷிகா ஆனந்த்) என்ற நடிகைக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாததால் அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் காட்டப்படுகிறது. கோர்ட்டிலிருந்து வெளியே வரும் ஸ்ரீஜா தனது தங்கையின் கல்லறைக்கு செல்கிறாள். போகும் வழியில் காதலன் ஷாம் (பிரஜன்), மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ஜார்ஜ் மரியான், ஆகியோரையும் கல்லறைக்கு வர சொல்கிறாள். அங்கு அவள் அவர்களிடம் அவள் தான் கொலைகளை செய்ததாக கூறுகிறாள். நடந்த சம்பவத்தை விவரிக்கும் போது, நடிகை ஸ்ரீஜா ஏற்காட்டில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது தனது படப்பிடிப்பிற்குப் பிறகு மலைப்பகுதியில் சிறிது காலம் தங்கியிருக்கிறார். அப்போதுதான் முத்து என்ற தொலைக்காட்சி நிருபர் அவளைப் பேட்டி காண அவரது ஹோட்டலுக்கு வருகிறார். ஆரம்பத்தில் நேர்காணல் நன்றாகவே செல்கிறது. ஆனால் அவனது எண்ணம் அவளை நேர்காணல் செய்வதில்லை என்பதை புரிந்துக் கொண்ட நடிகை ஸ்ரீஜா பெண்களை மிரட்டி சம்பாதிக்கும் ஒரு கொலைகார கும்பலை சேர்ந்த ஒரு போலி நிருபர் என்பதை அறிகிறாள். தன் சகோதரி தர்ஷினியின் கொலைக்கு இந்த கும்பல் தான் காரணம் என்பதை அறிந்ததும் பழிவாங்கும் நோக்கில், போலி நிருபருடன் மோதி அவனிடமிருந்து ஆதாரத்தை எடுத்து, அவனைக் கொன்றதாக அவர்களிடம் விவரித்து போலீஸ் அதிகாரியாக இருக்கும் காதலன் பிரஜினிடம் கொலைக் கும்பல் செய்த பல கொலை குற்றங்களின் ஆதாரத்தை ஒப்படைக்கிறாள். அடுத்து என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரஜன் (ஷாம்) – நல்ல நடிகர் இந்த படத்தில் இவர் சும்மா வந்து போகிறார் தவிர படத்தில் எந்த வகையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர் கதை மற்றம் கதாபாத்திர தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
கதாநாயகி யாஷிகா ஆனந்த் (சிரிஜா) – கதையின் நாயகி, அவரது கதாபாத்திரம் சரியாக மெருகேற்றப்படாததால் அவரது நடிப்பு எடுபடவில்லை.
ஹோட்டல் உரிமையாளர் ஜார்ஜ் மரியன் எப்போதும் போல் தனித்து ஸ்கோர் செய்கிறார்.
சகோதரி கேரக்டர் – தர்ஷினி – நடிப்பு ஓகே.
சைக்கோ வில்லன்- முத்துக்குமார் முன் உடல் மொழி, முக பாவனை எல்லாம் ஓர் அளவுக்கு கற்ற பின் நடிக்க வர வேண்டும். ஆனால் பார்வையாளர்கள் முகம் சுலிக்கும் வகையில் ஒரு கோமாளித்தானமான உடல் மொழி, முக பாவனை கொண்ட வில்லனாக நம்மை வெறுப்பேற்றுகிறார்.
வில்லன்- அதாங்க பாலாஜி மற்றும் ருத்ரா இருவரின் நடிப்பு துளியும் எடுபட வில்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எடிட்டர் : ஷரன் சண்முகம் எடிட்டிங் ரொம்ப மோசம்.
இசை : ஜாஸ்ஸி கிஃப்ட், ஒளிப்பதிவு : டோலி, பின்னணி இசை : எஸ் எஸ் சாயி தேவ் வி, நடனம் : நோபல் ஜே.சி.கே, VFX : மூர்த்தி – டி நோட், DI & கலவை : JGEE ஸ்டுடியோ, ஒலிப்பதிவு : நோபல், சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா, கலை : மஞ்சு ஆகியோரின் உழைப்பு மோசமான திரைக்கதையால் எடுபடவில்லை.
பெண்களின் உரிமைகள் பற்றி தீவிரமான கதையை விவரிக்கும் போது திரைக்கதையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சீரியஸாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒரு கதையை திரில்லராக படைக்க வேண்டும் என்று எண்ணி திரைக்கதையில் கமர்ஷியல் அயிட்டங்களை புகுத்தி, காட்சி படுத்ததிலும் விறுவிறுப்பில்லாத படைப்பாக வழங்கி உள்ளார் இயக்குனர் செல்வம் மாதப்பன்.
மொத்தத்தில் எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில், முத்துக்குமார் மற்றும் செல்வம் தயாரித்திருக்கும் படிக்காத பக்கங்கள் – சலிப்பு.