Site icon Chennai City News

தில்ராஜா சினிமா விமர்சனம் (DHILRAJA Movie Review) : தில் ராஜா – விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2/5

தில்ராஜா சினிமா விமர்சனம் (DHILRAJA Movie Review) : தில் ராஜா – விறுவிறுப்பு குறைவு | ரேட்டிங்: 2/5

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் படம் தில் ராஜா. விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார்.

ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, அம்ரீஷ், விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை அம்ரீஷ், பாடல்களை  நெல்லை ஜெயந்தன், கலைக்குமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு மனோ ஏ.நாராயணா. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஷ். மக்கள் தொடர்பு : மணவை புவன்.

ஒரு நடுத்தர குடும்பத்திற்கும் பணக்கார, மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்த இளைஞர்களுக்கும் இடையிலான மோதல் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு வியத்தகு முறையில் அதிகரிக்கிறது. சிறுவயதில் இருந்தே தீவிர ரஜினி ரசிகரான ரஜினி (விஜய் சத்யா), தனது மனைவி ஷெரின் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஷாப்பிங் முடித்து இரவு நேரத்தில் காரில் வந்து கொண்டிருக்கின்றனர்.வழியில் அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் போதையில் காரில் செல்லும் ஷெரினை அடைய நினைத்து அவர்களை துரத்துகின்றனர். ஒரு இடத்தில் காரை வழிமறித்து போதையில் இவர்களிடம் ரகளை செய்கின்றனர். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த கவுன்சிலர் போதையில் ரகளை செய்தவர்களிடம் தட்டிக்கேட்டபோது கவுன்சிலரை அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுட்டு கொள்கிறான். அப்போது நடக்கும் சண்டையில் அமைச்சரின் மகனை விஜய் சத்யா தாக்கும் போது எதிர்பாராதவிதமாக அமைச்சரின் மகன் கொல்லப்படுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக், நல்ல கட்டுமஸ்தான உடற்கட்டுடன் படத்தில் தீவிர ரஜினி ரசிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி உள்ளார்.

ரஜினியின் மனைவியாக ஷெரின் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நேர்த்தியான நடிப்பு வழங்கி உள்ளார்.

வில்லனாக ஏ.வெங்கடேஷ் நடிப்பில் மிரட்டல் இல்லை.

வனிதா விஜயகுமார் – டம்மி கதாபாத்திரம்.

போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா கடைசிவரை சும்மா கொலையாளியை தேடுகிறார்.

இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா, நகைச்சுவை எரிச்சல்.

கராத்தே ராஜா, அம்ரீஷ், ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் திரைக்கதைக்கு பெரிய வலு சேர்க்கவில்லை.

இசையமைப்பாளர் அம்ரீஷ் ஓபனிங் பாடலில் விஜய் சத்யா உடனான குத்தாட்டம் அசத்தல். இசை மற்றும் பின்னணி இசை ஓகே.

மனோ ஏ.நாராயணா ஒளிப்பதிவு, சுரேஷ் அர்ஷ் எடிட்டிங், சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் சுமாரான திரைக்கதை நகர்வால் அவர்களது உழைப்பு வீணடிக்கப்பட்ட உள்ளது.

கிளைமேக்சில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்து பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி, விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

மொத்தத்தில் கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் தில் ராஜா – விறுவிறுப்பு குறைவு.

Exit mobile version