தரைப்படை சினிமா விமர்சனம் : தரைப்படை அதிரடி ஆக்ஷன் திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
230

தரைப்படை சினிமா விமர்சனம் : தரைப்படை அதிரடி ஆக்ஷன் திரில்லர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா.
​படக்குழுவினர்:
பேனர்: ஸ்டோனெக்ஸ்
தயாரிப்பாளர்: பி பி வேல்முருகன்
திரைக்கதை, வசனம், இயக்கம்: ராம்பிரபா
இசை: மனோஜ்குமார் பாபு
ஒளிப்பதிவாளர்: சுரேஷ்குமார் சுந்தரம்
பாடலாசிரியர்: மனோஜ்குமார் பாபு
எடிட்டர்: ராம்நாத்
ஸ்டில்ஸ்: பவேஷ் பாலன்
கலை: ரவீந்திரன்
ஒப்பனை: பெர்சி அலெக்ஸ்
மக்கள் தொடர்பு : நிதிஷ் ஸ்ரீராம்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கிறது. ஏமாற்றப்பட்ட 1000 கோடி பணம் சூட்கேஸில் தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொண்டு தப்பிச் செல்ல முயலும் அந்த கும்பல் தலைவனை பிரஜன் சுட்டு விட்டு சூட்கேஸை கொள்ளையடிக்கிறார். அவரிடம் இருந்து அதை வேறு ஒரு கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த விஜய் விஷ்வா கொள்ளையடிக்க முயற்சிக்கிறார். அதே வேளையில், மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடும் ஜீவா சுடப்பட்ட மோசடி கும்பல் தலைவனை காப்பாற்றி மறைவான இடத்தில் அடைத்து வைத்து மருத்துவ உதவி செய்து, அவர் சுயநினைவு பெறும் போது அந்த கும்பல் அவர்கள் எம்.எல்.எம். தொழிலுக்காக ஜீவா குடும்பத்தை கொன்ற விவரத்தை பற்றி தெரிந்து கொள்கிறார். அத்துடன் அந்த கும்பல் தலைவனை ஜீவா சுட்டுக் கொள்கிறார். மேலும் இந்த தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் கேங்ஸ்டர் விஜய் விஷ்வா, பிரஜன் இடம் இருந்து அந்த பெட்டியை கைப்பற்றுகிறார். இப்படி அந்தப் பணம் அந்த மூவரிடம் மாறி மாறி போய்க் கொண்டிருக்கிறது. யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்ற நிலையில் அந்த 1000 கோடி பணம் சூட்கேஸ் இறுதியில் யாரிடம் போய் சேர்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா, மூவரும் தங்கள் கதாபாத்திரத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். படம் முழுக்க மூவரும் கையில் துப்பாக்கியுடன் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜீவா நடிப்பில் ரஜினியை காப்பி அடித்திருப்பது பார்வையாளர்களை வெறுப்படைய செய்கிறது. மூன்று பேருக்கும் ஆளுக்கு ஒரு ஜோடியாக சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா மூவரும் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி உள்ளனர்.

மிரட்டல் செல்வாவின் சண்டைக் காட்சிகள் துப்பாக்கி சத்தத்தால் தியேட்டரே அதிர்கிறது. கலை இயக்குநர் ரவீந்திரன், இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபு, ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம், எடிட்டர் ராம்நாத் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியான பங்களிப்பை தந்து கேங்ஸ்டர் கும்பல் கதைக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளனர்.

வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் கலந்த ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதையை எழுதி இயக்கியிருக்கும் ராம்பிரபா, படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று யூகிக்க முடியாத படி பல திருப்பங்களுடன், படம் முழுக்க துப்பாக்கி சத்தத்துடன் காட்சிகள் நகரும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.

மொத்தத்தில் ஸ்டோனெக்ஸ் சார்பில் பி பி வேல்முருகன் தயாரித்திருக்கும் தரைப்படை அதிரடி ஆக்ஷன் திரில்லர்.