தண்டுபாளையம் சினிமா விமர்சனம்: தண்டுபாளையம் பார்வையாளர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் :
சோனியா அகர்வால்
வனிதா விஜயகுமார்
டைகர் வெங்கட்
பிர்லா போஸ்
சூப்பர் குட் சுப்பிரமணி
சுமா ரங்கநாத்
பூஜாகாந்தி
முமைத்கான்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – பி.இளங்கோவன்
இசை – ஜித்தின் கே.ரோஷன்
நடனம் – பாபா பாஸ்கர்
கதை-திரைக்கதை-வசனம்-பாடல்-தயாரிப்பு-டைகர் வெங்கட்
இயக்கம் – கே.டி நாயக்-டைகர் வெங்கட்
தயாரிப்பு நிறுவனம் : வெங்கட் மூவிஸ்
மக்கள் தொடர்பு – வெங்கட்
இந்த திரைப்படம் தண்டுபால்யம் கும்பலின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டது. ஒன்பது பேர் கொண்ட ஒரு கும்பல் கர்நாடகாவில் கொள்ளையடிக்க இறங்குகிறது. தனிமையான வீடுகள் குறிவைக்கப்பட்டு, அந்த கும்பலின் தலைவி தண்ணீர் கேட்டு வீட்டிற்கு செல்கிறாள். அந்த வீட்டின் பெண்கள் உள்ளே செல்லும்போது, அந்த முழு கொள்ளை கும்பல், வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து, வீட்டை சூறையாடிவிட்டு, பெண்களை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து, கொல்கிறார்கள். இந்த கொலைகள் பரவியதால், தண்டுபாளைய கொள்ளை கும்பல்களைப் பிடிக்க அரசு உயர்மட்ட பணிக்குழுவை அமைக்கிறது. பயமுறுத்தும் நற்பெயரைக் கொண்ட இன்ஸ்பெக்டர் டைகர் வெங்கட் இந்த படைக்கு தலைமை தாங்குகிறார். தண்டுபாளைய கும்பலை பிடிப்பதில் வெற்றி பெற்றாரா? அதுதான் இந்தப் படத்தின் கதையாக கவர்ச்சியான காட்சிகளுடன் பயங்கரமாக அமைந்து இருக்கிறது.
சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், சுமா ரங்கநாத், பூஜாகாந்தி உட்பட அனைவரும் அவர்களுக்கான வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்க்கவே விசித்திரமான முகங்கள்.. கொடூரமான மனதை வெளிக்காட்டாத செய்கைகள்.. கொலை செய்ய அவர்கள் செய்யும் முன்னேற்பாடு ஸ்கெட்ச்சுகள், கொலை செய்யும்போது அவர்கள் அதனை ரசித்துச் செய்யும் காட்சிகள் என தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
டைகர் வெங்கட் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி நேர்த்தியான நடிப்பு தந்துள்ளனர்.
முமைத்கான் தனது அட்டகாசமான நடன அசைவுகளால் பார்வையாளர்களை அசர வைக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள், ஜித்தின் கே.ரோஷனின் இசையும், பி.இளங்கோவனின் ஒளிப்பதிவும் கூடுதல் ஈர்ப்புகள்.
பல கொலைகள் மற்றும் பலாத்காரங்கள் மற்றும் குற்றவாளிகளை எவ்வளவு புத்திசாலித்தனமாக பிடிப்பது, ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைகளம். திரைக்கதையில் பல காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. இயக்குனர்கள் டைகர் வெங்கட், கே.டிநாயக் பயங்கரமான காட்சிகளை அற்புதமாக காட்சிபடுத்தி உள்ளனர். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் மற்றும் க்ரிப்பிங் கதையுடன், க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யத்தை வைத்திருப்பதில் இயக்குனர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் படம் முழுக்க முழுக்க வன்முறை, கொலை, கற்பழிப்பு மற்றும் கொடூரமான காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்துள்ள தண்டுபாளையம் பார்வையாளர்களின் ரத்தத்தை உறைய வைக்கும்.