சொர்கவாசல் சினிமா விமர்சனம் : சொர்க்கவாசல் மிரட்டலான சர்வைவல் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
347

சொர்கவாசல் சினிமா விமர்சனம் : சொர்க்கவாசல் மிரட்டலான சர்வைவல் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் : ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல், ஷரபுதீன், ஹக்கீம் ஷாஜஹான், சானியா ஐயப்பன், சாமுவேல் அபியோலா ராபின்சன், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :​
இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத்.
ஆக்ஷன் : பிரின்ஸ் ஆண்டர்சன், செல்வா ஆர்கே மற்றும் தினேஷ் சுப்பராயன் மாஸ்டர்
இசை : கிறிஸ்டோ சேவியர்
ஓளிப்பதிவு : பிரின்ஸ் ஆண்டர்சன்
படத் தொகுப்பு : செல்வா ஆர்.கே
தயாரிப்பு : ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ்
பத்திரிக்கை தொடர்பு – நிகில்முருகன்

கதை 1999 காலகட்டத்தில் நடைபெறுகிறது. வடசென்னையில் தனது தாயுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் ஒரு சிறிய உணவு கடை நடத்தி வருகிறார் பார்த்திபன் (ஆர்.ஜே.பாலாஜி) தனது கடையை விரிவுபடுத்த வங்கியில் லோன் வாங்க முயற்சி செய்கிறார். அவரது வழக்கமான வாடிக்கையாளரான ஒரு அரசு அதிகாரி சண்முகம், பார்த்திபனுக்கு உதவி செய்கிறார். அவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், திடீரென அந்த அதிகாரி சில மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். இந்த கொலைக்கு பார்த்திபன் தான் காரணம் என அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தான் சிறைக்கு வர காரணம் சிகா தான் என அறிந்த பார்த்திபன், சிகாவை எதிர்க்க முடியாமல் இருக்கும் போது அங்கு சிறையின் கொடுமை அவனை மேலும் துரத்துகிறது. சிறை மொத்தத்தையும் தன்னுடைய ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ ஆசைப்படுகிறார். ஆனால், புதிதாக வரும் காவல் அதிகாரி சுனில் (ஷராசஃப் யு தீன்) சிகாவை ஒன்றுமில்லாமல் முடக்க நினைக்கிறார். மறுபக்கம் நைஜீரிய கைதியான கென்ட்ரிக் (சாமுவேல் ராபின்சன்) தனிமைச் சிறையில் இறக்கும் போது, ரவுடி சிகா காவல் அதிகாரி சுனில் உடன் மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில்; பார்த்திபனின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சிறை அதிகாரி சுனிலின் சூழ்ச்சியால் ரவுடி சிகா கொல்லப்படும் போது சிறையில் கலவரம் வெடிக்கிறது. பிரபல ரவுடியான சிறைக்கைதி சிகா குறித்தும், சிறை கண்காணிப்பாளர் சுனில் குறித்தும் விசாரிக்க தொடங்குகிறார் இஸ்மாயில். விசாரணையில் சிறை காவல் அதிகாரி கட்டபொம்மன் (கருணாஸ்), பார்த்திபன், உட்பட பலர் தங்களின் பார்வையில் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அக்கலவரத்தில் சிறை கண்காணிப்பாளர் சுனில் என்ன ஆனார், சிறையில் பார்த்திபன் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘சொர்க்கவாசல்’.

முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜி, விரக்தி, இயலாமை, போன்ற அத்தனை வெளிப்பாடுகளையும் உடல் மொழியின் மூலம் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரவுடி சிகா கதாபாத்திரத்திற்கு செல்வராகவன் நியாயம் செய்திருக்கிறார்.

கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல், ஷரபுதீன், ஹக்கீம் ஷாஜஹான், சானியா ஐயப்பன், சாமுவேல் அபியோலா ராபின்சன், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உட்பட அனைத்து நடிகர்களும் அவர்களுக்கு உண்டான பாணியில் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளனர்.

மிரட்டலான திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்து விறுவிறுப்பை கூட்டி ரசிகர்களை கதையோடு பயணிக்க செய்துள்ளது அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு.

சென்னையில் மத்தியச் சிறையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள், கைதிகள் என பலரும் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரத்தை மையமாக வைத்து கற்பனை கலந்த திரில்லர் படத்துக்கு தேவையான அனைத்தையும் வைத்து திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான படைப்பாக படைத்துள்ளார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.

மொத்தத்தில் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சொர்க்கவாசல் மிரட்டலான சர்வைவல் க்ரைம் த்ரில்லர்.