சத்திய சோதனை திரைப்பட விமர்சனம் : ‘சத்திய சோதனை’ பார்வையாளர்களை சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைக்கிறது | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள்:
பிரேம்கி அமரன் – பிரதீப்
ஸ்வயம் சித்தா – பிரவீணா
ரேஷ்மா – அன்னம் (பிரதீப் சகோதரி)
சித்தன் மோகன் – குபேரன்
செல்வ முருகன் – மகாதேவன்
ஹரிதா – மகாலட்சுமி
பாரதி – முப்பிடாதி
ராஜேந்திரன் – உளவாளி ராமர்
ஞானசம்பந்தம் – நீதிபதி
முத்துப்பாண்டி – இசக்கி
கர்ண ராஜா – செல்வராஜ் (பிரதீப் மாமா)
தயாரிப்பு: சமீர் பாரத் ராம்
தயாரிப்பு: சூப்பர் டாக்கீஸ்
எழுதி இயக்கியவர் : சுரேஷ் சங்கையா
ஒளிப்பதிவாளர்: ஆர்.வி. சரண்
எடிட்டர்: வெங்கட் ராஜன்
கலை இயக்குனர்: வாசுதேவன்
பாடல் வரிகள்: வேல்முருகன்
இசை: ரகு ராம். எம்
பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி
பாடியவர்கள்: கங்கை அமரன், வீரமணி ராஜு, திவாகர்
வசனங்கள்: வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா
வண்ணம்: அஜித் வெடி பாஸ்கரன்
Sfx : சதீஷ்
கலவை: ராஜா நல்லையா
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
பொதுவுடைமை மற்றும் தனியுடமை பற்றி ரசிக்கும் படியாகவும், சிந்திக்கும் படியாகவும் பேசுகிறார் நீதிபதியாக வரும் ஞானசம்பந்தன், காதலி பிரவீணா (ஸ்வயம் சித்தா), பிரதீப் சகோதரி அன்னம் (ரேஷ்மா), கான்ஸ்டபிள் குபேரன் (சித்தன் மோகன்), மகாதேவன் (செல்வ முருகன்), மகாலட்சுமி (ஹரிதா), முப்பிடாதி (பாரதி), உளவாளி ராமர் (ராஜேந்திரன்), இசக்கி (முத்துப்பாண்டி), பிரதீப் மாமாவாக செல்வராஜ் (கர்ண ராஜா) ஆகியோர் எளிமையான கதையில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இவர்களது நகைச்சுவை கலந்த பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
குறிப்பாக ஆவுடையம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாட்டி ஒரு யதார்த்தமான கிராமத்து பாட்டியை பிரதிபலித்து நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா இருவரின் வசனங்கள் அற்புதமாகவும் சிந்திக்க கூடியதாகவும் அமைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் வழியில் ஏதேனும் சம்பவத்தை பார்த்தால், காவல் நிலையத்திற்கு சென்று அந்த சம்பவத்தை பற்றி கூறினால் அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பதையும், காவல்துறையில் நிலவும் திறமையின்மை மற்றும் ஊழல் நிலையை அம்பலப்படுத்தும் விதம் அதிக லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதை புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா.
மொத்தத்தில், ‘சத்திய சோதனை’ பார்வையாளர்களை சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைக்கிறது.