கருடன் சினிமா விமர்சனம் : கருடன் – ஆக்ரோஷமானவன் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
சூரி – சொக்கன்
சசிகுமார் – ஆதித்யா
உன்னி முகுந்தன் – கருணாகரன்
ரேவதி ஷர்மா – விண்ணரசி
சிவதா – தமிழ் செல்வி
பிரிகிடா சாகா – பர்வீன்
ரோஷனி ஹரிப்ரியன் – அங்கையர்கன்னி
சமுத்திரகனி – முத்துவேல்
மைம் கோபி – தியேட்டர்காரன் நாகராஜ்
ஆர்.வி.உதயகுமார் – கா. தங்கபாண்டி
வடிவுக்கரசி – செல்லாயி அப்பத்தா
துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் – வைரவேல்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
எழுத்தாளர் – ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் மற்றும் டீம்
ஒளிப்பதிவு – ஆர்த்தர் ஏ.வில்சன்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
படத்தொகுப்பு – பிரதீப் ஆ. ராகவ்
தயாரிப்பு நிறுவனங்கள் – GRASSROOT FILM COMPANY & LARK STUDIO
தயாரிப்பாளர் – கே.குமார்
FIVE STAR கே.செந்தில்குமார் வெளியீடு
மக்கள் தொடர்பு – யுவராஜ்.
அமைச்சர் தங்கப்பாண்டி (ஆர்.வி. உதயகுமார்) தேனி அருகே உள்ள nfhk;ig அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 300 கோடி மதிப்புடைய ஒரு பெரிய நிலத்தின் மீது தனது பார்வையை வைப்பதுடன் அந்த இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார். ஆனால், அந்த இடத்தின் மூலப்பத்திரம் nfhk;ig அம்மன் கோவில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன் வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அமைச்சர் தங்கப்பாண்டி. அதே ஊரில் சிறு வயதில் இருந்தே இணைபிரியா நண்பர்கள் ஆதித்யா (சசிகுமார்) மற்றும் கருணாகரன் (உன்னி முகுந்தன்) மற்றும் கருணாவின் குடும்பத்திற்கு விசுவாசமான வேலைக்காரன் சொக்கன் (சூரி) இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் கருணாவின் உயிரைக் காப்பாற்றிய அனாதையான சொக்கன், இரு குடும்பங்களிலும் ஒரு நிலையான பந்தத்துடன், விசுவாசமாக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அமைச்சர் தங்கப்பாண்டியன் யோசனைப்படி தியேட்டர்காரன் நாகராஜ் (மைம் கோபி) கோம்பைக்கு வந்து, கருணாவின் நிலையை அறிந்து அவரிடம் பெரிய தொகைக்கான ஒப்பந்தத்தை வழங்கி தனது சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கிறார்.அதனால் கருணா ஆதிக்கு துரோகம் செய்ய முடிவு செய்கிறார். கருணாவின் பாட்டி செல்லாயி (வடிவுக்கரசி) மர்மமான சூழ்நிலையில் இறக்க கோயில் நிலங்களின் கட்டுப்பாடு கருணாவிற்கு வர, போலி கோயில் நகை சிக்கலில் மாட்டுகிறார். அதனால் கருணா விசுவாசி சொக்கனை புதிய அறங்காவலராக ஆக்குகிறார், இது ஆவணங்களைத் திருடுவதற்கு உதவும் ஒரு சூழ்ச்சியான நண்பனின் நடவடிக்கை என்பதை அறியாத ஆதியை கருணாவும், தியேட்டர்காரன் நாகராஜனின் கூட்டாளிகளும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்கிறார்கள், இந்த கொடூரமான செயலுக்கு சொக்கன் சாட்சி. பிறகு சொக்கன் தியேட்டர்காரன் நாகராஜனிடம் கோவிலில் இருந்து எடுத்த மூலபத்திரத்தை ஒப்படைக்கிறார். அதன் பின் ஆதியின் கொலை, கருணாவின் துரோகம் சொக்கனின் விசுவாசத்தை உடைத்து உச்சக்கட்டத்தை அடையும் போது ஏற்படும் பேரழிவே படத்தின் மீதிக்கதை.
சூரி ‘விசுவாசம்’ என்ற வார்த்தையின் உயிருள்ள உருவகமாக இந்த அதிரடி நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்து ஒரு அற்புதமான நடிகராக வெளிப்படுகிறார்.
சசிகுமார் அழுத்தமான நடிப்புடன் தனித்து நிற்கிறார்.
உன்னிமுகுந்தன் நட்பு, பாசம், துரோகம் என அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் திரை பிரவேசத்தை சமமாக பகிர்ந்து அசத்தியிருக்கிறார்கள்.
ஆதியின் மனைவி தமிழ் செல்வியாக ஈர்க்கக்கூடிய கதாபாத்திரத்தில் சிவதா தேவையான நடிப்பை வழங்கி கதைக்கு உயிரோட்டத்தை அளித்திருக்கிறார்.
ரேவதி ஷர்மா (விண்ணரசி), பிரிகிடா சாகா (பர்வீன்), ரோஷனி ஹரிப்ரியன் (அங்கையர்கன்னி), சமுத்திரகனி (முத்துவேல்), மைம் கோபி (தியேட்டர்காரன் நாகராஜ்), ஆர்.வி.உதயகுமார் (அமைச்சர் கா. தங்கபாண்டி), வடிவுக்கரசி (செல்லாயி அப்பத்தா), துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் (வைரவேல்) சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
உணர்ச்சிகரமான கிராமப்புற ஆக்ஷன் படமாக அமைய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு – ஆர்த்தர் ஏ.வில்சன், இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு – பிரதீப் ஆ. ராகவ் ஆகியோரின் பங்களிப்பு அங்கம் வகிக்கிறது.
மூன்று நண்பர்களுக்கு இடையேயான நட்பு, பகை, வஞ்சகம் மற்றும் ஈகோ, அதில் ஒரு நண்பனின் விசுவாசம், என சுவாரஸ்யமான கதைக்களத்தில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத முடிச்சுகள் உச்சக்கட்டத்தை அடையும் எமோஷனல் காட்சிகளுடன் திரைக்கதை அமைத்து அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் சிறப்பாகக் கையாண்டு இயக்கி உள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.
மொத்தத்தில் GRASSROOT FILM COMPANY & LARK STUDIO இணைந்து தயாரித்துள்ள கருடன் – ஆக்ரோஷமானவன்.