எல்.ஜி.எம் விமர்சனம்: அடுத்த படைப்பின் மூலம் தோனி நிச்சயம் மாபெரும் வெற்றி படம் தமிழ் சினிமாவில் படைப்பார் | ரேட்டிங்: 2.5/5
தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம் ‘எல்.ஜி.எம்’ ( Lets Get Married).
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை : ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு : விஸ்வஜித்
எடிட்டிங் : பிரதீப், ராகவ்
இயக்குநர் : ரமேஷ் தமிழ்மணி
தயாரிப்பாளர் : சாக்ஷி தோனி
திரைக்கதை : ரமேஷ் தமிழ்மணி
கதை : ரமேஷ் தமிழ்மணி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஒரு இளம் பெண் தன் காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தன் வருங்கால மாமியாருடன் நேரத்தை செலவிட முடிவு செய்கிறாள். கௌதம் (ஹரிஷ் கல்யாண்) மற்றும் மீரா (இவானா) இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் பெற்றோரிடம் அவர்கள் தங்களது காதல் பற்றி சொல்ல முடிவு செய்கிறார்கள். அம்மா லீலா (நதியா) அவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறார். ஆனால் திருமண சம்பந்தம் பேச போன இடத்தில், ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. கௌதமின் தாயார் லீலாவுடன் (நதியா) வீட்டைப் பகிர்ந்து கொள்வது பற்றி நினைக்கும் போது மீராவுக்கு அச்சம் ஏற்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என மீரா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு ஆரம்பித்த சில நொடிகளில் நின்று போகிறது. மீரா திருமணத்திற்கு முன் கௌதமின் தாயை புரிந்து கொள்ள விரும்புகிறாள். லீலாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு குடும்பப் பயணத்திற்குச் செல்லும் யோசனையை அவள் முன்மொழிகிறாள். அதற்கு கௌதம் ஒப்புக்கொள்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி படத்தை இழுவையாக இழுக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் நதியா ஆகியோர் ஒரு சுமாரான திரைக்கதைக்கு அவர்கள் முடிந்த அளவுக்கு உழைத்துள்ளார்கள்.
யோகி பாபுவின் நகைச்சுவை கதைக்கு போதுமானதும், சுவாரஸ்யமாகவும் இல்லை என்பது அவருக்கு தெரியும், என்றாலும் “மிஸ்டர் கூல்” தயாரிப்பில் தான் இருக்க வேண்டும் என்பதற்காக இதில் அங்கங்கே தோன்றுகிறார். அவ்வளவு தான்.
நண்பனாக ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் அனைத்து துணை கதாபாத்திரங்கள் அலுப்பு தட்டும் நடிப்பை வழங்கியுள்ளனர்.
மோசமாக உருவாக்கப்பட்ட CGI மற்றும் ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்தின் படுமோசமான கேமரா கோணங்கள், மற்றும் சீரற்ற வண்ணம் படத்தின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
பிரதீப், ராகவ் ஆகியோரின் மோசமான எடிட்டிங், 30 நிமிட திரைப்படம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருவரில் யாராவது ஒருவர் படத்தொகுப்பை கவனித்து இருக்கலாம்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் இந்தப் படத்தை தனது பேனரில் வெளியிட எப்படி தேர்ந்தெடுத்தார். மேலும் இன்று நல்ல கதைக்களத்துடன் வெற்றி பெறக்கூடிய நிறைய சிறிய படங்கள் உள்ளன. இது போன்ற படங்கள் ஏன் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் தேர்ந்தெடுப்பதில்லை என்பதற்கான காரணத்தை அவர் கூற முடியுமா? சிறிய தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் நல்ல கதைக்களத்துடன் இருக்கும், வெற்றிப் பெறக்கூடிய படங்களுக்கு பேனர் வேல்யூ இல்லாததாலும், அவர்களால் படத்தை பெரிய ப்ரோமோட் செய்ய முடியாததால் அந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மிக மிக குறைவான திரையரங்கம், குறைவான காட்சிகள் தான் கிடைக்கிறது. இனியாவது சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் தரமான சிறிய படங்களுக்கு ஆதரவு தந்து வெற்றிப் பெறக்கூடிய சிறிய பட தயாரிப்புகளையும் வாழவைக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திரைப்படத் தயாரிப்பில் இறங்குவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அவரது முதல் முயற்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. லெட்ஸ் கெட் மேரேட் (எல்ஜிஎம்) மூலம் அனைத்து வகையான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் யோசனையில் அவர் முதல் தயாரிப்பிற்காக தேர்வு செய்த களம் தமிழ் சினிமா.ஆனால்……
கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்தவர் தோனி. ஒட்டு மொத்த எல்ஜிஎம் படக்குழுவினர்கள் ஒன்று சேர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக புதிய அவதாரத்தில் தடம் பதிக்க காத்திருந்த ‘மிஸ்டர் கூல்’ தோனியை தயாரிப்பாளர் அவதாரத்தில் படு தோல்வியடையச் செய்துள்ளனர்.
இந்த திரைக்கதையை தோனி எப்படி ஏற்றுக்கொண்டார்? என்று தெரியவில்லை? இருந்தாலும் “மிஸ்டர் கூல்” இந்த ஒட்டுமொத்த படக்குழுவினர்களால் எல்ஜிஎம் க்கு கிடைத்த தோல்வியின் மூலம் சினிமாவில், எங்கு தவறு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அடுத்த படைப்பின் மூலம் தோனி நிச்சயம் மாபெரும் வெற்றி படம் தமிழ் சினிமாவில் படைப்பார் என்பது உறுதி.
மொத்தத்தில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் எல்.ஜி.எம் தமிழ் சினிமாவுக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் மாபெரும் ஏமாற்றம்.