எலக்சன் சினிமா விமர்சனம் : எலக்சன் உள்ளாட்சித் தேர்தலை பற்றி வலுவாகப் பேசும் அரசியல் நாடகம் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள்
விஜய் குமார் – நடராசன்
ப்ரீத்தி அஸ்ராணி – ஹேமா
ரிச்சா ஜோஷி – செல்வி
ஜார்ஜ் மரியன் – நல்லசிவம்
பவெல் நவகீதன் – கனி
திலீபன் – சுதாகர்
ராஜீவ் ஆனந்த் – மூர்த்தி
குலோத்துங்கன் உதயகுமார் – தியாகு
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – தமிழ்
வசனம் – அழகிய பெரியவன் – தமிழ் – விஜய் குமார்
ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு
இசை – கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு – சி.எஸ். பிரேம் குமார்
தயாரிப்பு – ஆதித்யா
தயாரிப்பு நிறுவனம் – ரீல் குட் ஃபிலிம்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மாவட்டம் வாணியம்பாடி அருகே, நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). கட்சி துண்டு இல்லாமல் வெளியே செல்லாத அளவுக்கு கட்சிக்கு விசுவாசமானவர். அவரது மகன் நடராசன் (விஜயகுமார்). நல்லசிவத்தின் 40 வருட நண்பர் தணிகாசலத்தின் மகள் செல்வியை (ரிச்சா ஜோஷி) நடராசன் காதலிக்கிறார். நண்பர்கள் நல்லசிவம், தணிகாசலம் ஆளும் தமிழ்நாடு மக்கள் கழகம் கட்சியை சேர்ந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, நண்பர் தணிகாசலத்திற்கு வாய்ப்பு கேட்கிறார் நல்லசிவம். ஆனால், அதற்கு தலைமை மறுக்கவே தணிகாசலம் சுயேச்சையாக நின்ற போதும், தலைமை அறிவித்த கூட்டணிக் கட்சி வேட்பாளர் தியாகுவின் வெற்றிக்குப் தேர்தல் பணியாற்றுகிறார். நல்லசிவத்தின் 40 வருட நண்பர் தணிகாசலத்தின் நட்பு பகை ஆக மாறுகிறது. மேலும் செல்வி – நடராசன் காதலுக்கு தணிகாசலம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நடராசனின் எதிர்ப்பை மீறி செல்விக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டப்பஞ்சாயத்து செய்யும் காதர் பாய் உதவியுடன் மணமுடிக்கிறார்கள். தணிகாசலத்தின் மகன் சுதாகரும் (திலீபன்) நடராசனின் சகோதரி கணவர் கனியும் (பாவல் நவகீதன்) சிறு வயது முதலே நண்பர்கள். ஆனால் குடும்ப பகை அவர்களது நட்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இம்முறை 40 வருட அரசியல் பணி இருந்தும் நல்லசிவத்துக்கு சொந்த கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் நல்லூரில் அவமானப்படும் தந்தையின் மானத்தைக் காப்பாற்ற ஆரம்பத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத நடராசன், அவரது தந்தை எதிர்கொள்ளும் அவமரியாதை அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது, அத்துடன் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார். இது அவரது மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கை அப்படியே மாற்றுகிறது. அதன் பின் உள்ளாட்சி தேர்தலால் நடராசன் குடும்பத்தினர் சந்திக்கும் இன்னல்களும், சவால்கள் மற்றும் பிரச்சனகள் என்னென்ன, என்பதே ‘எலெக்சன்’ படத்தின் மீதிக்கதை.
விஜயகுமார், நடராசன் கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.
திரைக்கதையின் முக்கிய கனி கதாபாத்திரத்தில் பாவல் நவகீதன் அற்புதமான நடிப்பை தந்து கதையை விறுவிறுப்பாக நகர பெரும் பங்கு வகிக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.
அதே போல சுதாகர் கதாபாத்திரத்தில் திலீபன் அரசியலில் சைலண்ட் கில்லராக வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
கதையின் நாயகனாக கருதப்படும் வலுவான நல்லசிவம் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்காக உழைக்கும் உண்மைத் தொண்டன் நினைவு படுத்துகிறது இவரது கதாபாத்திரம்.
ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ராஜீவ் ஆனந்த், நாஞ்சியால் சுகந்தி, குலோத்துங்கன் உதயகுமார் உட்பட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை நேர்த்தியான நடிப்பின் மூலம் நிருபித்துள்ளனர்.
வசனம் – அழகிய பெரியவன், தமிழ், விஜய் குமார், ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு, இசை – கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம் குமார் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களின் பணி, உள்ளாட்சி தேர்தல் என்ற அரசியல் களத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
உள்ளாட்சி அமைப்பு குறித்தும் அதை சுற்றி நடக்கும் சாதி அரசியல், குடும்ப அரசியல், அரசியலில் உள்ள உள்ளடி வேலைகள் என்ன என்ன, அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் பகையுணர்வு, தனது செல்வாக்கை நிரூபிக்கும் அரசியல்வாதிகள், சாகும்வரை கட்சிக்கும் தலைமைக்கும் உண்மையாக இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கும் தொண்டன், மோசமான அரசியல்வாதி, என அனைத்தையும் ஓர் அளவுக்கு திரைக்கதையில் புகுத்தி நன்றாக வரையப்பட்ட மற்ற கதாபாத்திரங்களுடன் உள்ளாட்சித் தேர்தல்கள் மோசமான நிலையை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.
மொத்தத்தில் ரீல் குட் ஃபிலிம் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கும் எலக்சன் உள்ளாட்சித் தேர்தலை பற்றி வலுவாகப் பேசும் அரசியல் நாடகம்.