அநீதி திரைப்பட விமர்சனம் : அநீதி அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பு திறன் மூலம் பார்வையாளர்களுக்கு அநீதி இழைக்க வில்லை | ரேட்டிங்: 3/5
அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், இவர்களுடன் ஜி.வசந்தபாலன சேர்ந்து தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் அநீதி. எஸ்.பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன், டி.சிவா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு-எட்வின் சாகே, வசனம்-எஸ்.கே.ஜீவா, எடிட்டர்-ரவிக்குமார்.எம், கலை-சுரேஷ் கல்லேரி, லைன் புரொடியூசர்-நாகராஜ் ராக்கப்பன், தயாரிப்பு நிர்வாகி-ஜெ. பிரபாகர், மக்கள் தொடர்பு-நிகில் முருகன்.
மீல் மங்கி என்ற நிறுவனத்தில் உணவு விநியோக முகவராக பணிபுரிகிறார் திருமேனி (அர்ஜுன் தாஸ்). படத்தின் ஆரம்பத்தில், 13 வது மாடி வரை நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு வாடிக்கையாளர்களிடம் அவர் கடுமையாக நடத்தப்படுவதை காணலாம். இந்தப் பணியில் தினசரியாக அவர் சந்திக்கும் அவமானங்களும், சாக்லேட் மற்றும் அது குறித்த விளம்பரங்களும் அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன. இதன் விளைவாக அவரை மோசமாக நடத்துபவர் யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் ஒரு ‘கொல்லும் உள்ளுணர்வு’ பெறுகிறார். அதற்காகச் சிகிச்சைக்குச் செல்லும் அவருக்கு அப்செசிவ்-கம்பல்ஸிவ் என்கிற உளவியல் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது. மன அழுத்தம் நிறைந்த இவரது வாழ்வில் நகரத்தில் உள்ள ஆடம்பரமான வீடு ஒன்றில் உணவு விநியோகம் செய்யும் போது வீட்டுப் பணிப்பெண்ணான சுப்புலட்சுமி (துஷாரா விஜயன்) என்ற பெண்ணை அவன் சந்திக்க நேர்கிறது. திரு அவளின் அன்பால் ஆறுதல் அடைகிறான். உணவு விநியோகம் என்ற பெயரில் அவளை அடிக்கடி சந்திக்க முடிவு செய்கிறான். இந்த சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது. ஒருவர் பிரச்னைக்கு மற்றவர்கள் ஆறுதலாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத விதமாக சுப்புலட்சுமியின் முதலாளி அம்மா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதிலிருந்து இவர்களுக்கு மேலும் பல பிரச்சனை ஆரம்பமாகிறது. அத்துடன் இது கொலையாக மாறுகிறது. இந்த கொலைப்பழி அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் மீது விழுகிறது. அந்த மரணம் அவர்கள் வாழ்க்கையை என்னவெல்லாம் செய்கிறது என்பது ‘அநீதி’ திரைப்படத்தின் கதை.

கதையின்; இன்னொரு பெரிய அம்சம் சுப்புலட்சுமி கதாபாத்திரம். அந்த சிக்கலான கதாபாத்திரத்தை துஷாரா விஜயன் நன்றாக உள்வாங்கி ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தமாக நடித்து அந்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
அதே இரண்டாம் பாதியில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் தோன்றும் காளி வெங்கட்டின் சிவசங்கரன் கதாபாத்திரம். பாசமிகு தந்தையாக அவரின் எமோஷனலான நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் அந்த கதாபாத்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகிறது.
வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன், டி.சிவா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
எஸ்.கே.ஜீவாவின் உணர்வு பூர்வமான வசனம், எட்வின் சாகே ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையும் பின்னணி இசையும், பலம் சேர்த்துள்ளது. எடிட்டர் ரவிக்குமார்.எம் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் பார்வையாளர்களுக்கு அலுப்பு தட்டி இருக்காது.

மொத்தத்தில், அர்பன் பாய்ஸ் ஸ்டியோஸ் சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன சேர்ந்து தயாரித்திருக்கும் அநீதி அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பு திறன் மூலம் பார்வையாளர்களுக்கு அநீதி இழைக்க வில்லை.