Chennai City News

முதல் படமே தேன் போல இனிக்கிறது – அனைவருக்கும் நன்றி நடிகை அபர்ணதி

முதல் படமே தேன் போல இனிக்கிறது – அனைவருக்கும் நன்றி நடிகை அபர்ணதி

சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது தேன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே பல விருதுகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. தற்போது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

தான் நடித்த படம் விருதுகளை குவித்து வருவது குறித்து அபர்ணதி கூறும்போது, ‘எனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தேன்’ திரைப்படத்திற்குத் தாங்கள் அனைவரும் அளித்துவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, கலை இயக்குநர் மாயபாண்டி ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன். படத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும், ஆதரவையும் நினைவு கூர்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் தான் ‘தேன்’ இன்று தித்திக்கிறது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தரான ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் சாருக்கு தனிச்சிறப்பான நன்றிகள். அவர் படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
இதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் எனது அடுத்தத்தத் திரைப்படமான ‘ஜெயில்’ படத்திற்கும் தங்களின் ஒத்துழைப்பு தொடர வேண்டுகிறேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால நல்வாழ்த்துகள்.

Exit mobile version