
கொம்பு விமர்சனம்

சினிமா இயக்குனரான ஜீவா, ஆவிகளை ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டே, ஜீவாவின் சித்தப்பா பாண்டியராஜன் மற்றும் நண்பர்களோடு ஆவிகளை பற்றி ஆராய்ச்சி செய்ய கிராமத்திற்கு செல்கின்றனர். ஒரே வீட்டில் இரண்டு மரணங்கள் நடந்த வீட்டை ஆராய்ச்சி செய்து கண்காணிக்கின்றனர். இவர்களை ஆவி பயமுறுத்தி துரத்துகிறது. அந்த வீட்டில் இருக்கும் கொம்பினால் மரணங்கள் நடந்தது என்பதை அறிந்து உண்மையை அறிய முயல்கின்றனர். இறுதியில் காரணத்தை கண்டுபிடித்தார்களா? உண்மையான குற்றவாளி யார்? என்பதே க்ளைமேக்ஸ்.
ஜீவா ( லொள்ளு சபா),திஷா பாண்டே,பாண்டியராஜன்,சுவாமிநாதன்,கஞ்சா கருப்பு,அம்பானி சங்கர், யோகேஸ்வரன் ஆகியோரின் நடிப்பு காமெடியாகவும், கலகலப்பாகவும் கதையை நகர்த்த உதவுகிறது.
தேவ்குருவின் இசையும், சுதிப்பின் ஒளிப்பதிவும் ஆவி கலந்த கதைக்கு பலம் சேர்கின்றனர்.
கலை -ஆனந்த்மணி,படத்தொகுப்பு- கிரீசன், ஸ்டண்ட் – கஜினி குபேந்தர், நடனம் – ராதிகா ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு.
ஆவிகளின் மீது பழியை போட்டு பெண்களை மிரட்டி ஏமாற்றும் ஊர் தலைவர் மற்றும் அவரது நண்பரின் உண்மையான முகத்தினை கிராமத்திற்கு தெரிய வைக்கும் காதல், காமெடி கலந்த திரைக்கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் இப்ராகிம்.
சாய் சீனிவாசா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள கொம்பு கூர்மையான ஆயுதம்.