Chennai City News

‘வேட்டையன்’ திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது! நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!!

‘வேட்டையன்’ திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது! நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த், கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறும் போது, கூலி திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. ‘இந்தியன் 2’ திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ‘வேட்டையன்’ திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த், காரில் ஏறி புறப்படுவதற்கு முன்பு ரசிகர்கள், அவரது காரின் அருகே வந்து புகைப்படம் எடுப்பதற் காகவும், அவருடன் செல்பி எடுப்பதற்காகவும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version