
வெற்றிமாறனின் படத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கவிருந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஒப்பந்தம்!

தமிழில் ‘மாஸ்டர்’, தெலுங்கில் ‘உப்பென்னா’ ஆகியப் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது பாலிவுட் உட்பட மற்ற திரையுலகிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
தோற்றம், கதாபாத்திரத்தின் தன்மை என சவாலான விஷயங்களை கூலாக ஹேண்டில் செய்து வருகிறார். சூப்பர் டீலக்ஸில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்தார். சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற திரைப்படங்களில் வயதான கதாபாத்திரங்களில் நடித்தார். ஹீரோ, வில்லன், முதியவர் என எந்த கதாபாத்திரம் என்றாலும் எளிதாக கையாள்கிறார்.
இருப்பினும், நாவலில், வயதானவர் ஹீரோவுக்கு அப்பா இல்லை. ஒரு கொலைகாரனாக இருந்து பின்னர், கதாநாயகனுக்கு தந்தையாக மாறுவார். படத்தில் எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.