
‘வலிமை’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு : ரஷ்யாவில் பைக்கில் வலம் வரும் அஜித்

ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஷ்யாவில் பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.