‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர் – இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்
முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது.
‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து ‘ருத்ரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையான ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார்.