மாறன் விமர்சனம்: மாறன் தனுஷின் தீவிர ரசிகர்களுக்கு மாபெரும் ஏமாற்றமே மிச்சம் – மதிப்பீடு: 2 / 5
நடிகர் தனுஷ் மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியுள்ளது மாறன். சுருதி வெங்கட், சமுத்திரகனி, மகேந்திரன், ராம்கி, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வெளியீடு: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
னுஷின் தந்தை நேர்மையான ரிப்போர்ட்டராக இருந்து உண்மையாக நடந்த சம்பவத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் நியாயமாக இருக்க வேண்டும் மென்று தனது தொழிலுக்கு நேர்மையாக இருந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளால் தன் உயிரையும் இழக்கிறார். இரண்டாவது பிரசவத்தின்போது தனுஷின் அம்மாவும் இறந்து விடுகிறார்.
சிறு சிறு வயதிலேயே தனது தந்தையும், தாயையும் இழந்த தனுஷ் தங்கையை தானே வளர்க்கிறார். இவர்களுக்கு உதவிகரமாக தனுஷின் மாமா ஆடுகளம் நரேன் இவர்களைப் பார்த்துக் கொள்கிறார்.
தனது தந்தை போலவே படித்து முடித்து ரிப்போர்ட்டர் தொழிலில் சேரும் தனுஷ் மக்களுக்கு நேர்மையான செய்திகளும் உண்மையான செய்திகளும் தெரிவிக்க வேண்டும் நியாயமாக நடந்து கொள்கிறார். இதனால் தனுஷின் சொந்த வாழ்க்கையில் சில அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்? நேர்மையாக இருந்து என்னென்ன சாதித்தார்? என்பதே மாறன் படத்தின் கதை.
தனுஷ் ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும் எப்படி இந்த கதைக்கு ஓகே சொன்னார் என்று தெரியவில்லை. மேலும் ஓரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தனுஷ் வேண்டாவெறுப்பாக இப்படத்தில் நடித்தது போல் தெரிகிறது.
மாடர்ன் பெண்ணாக வரும் நாயகி மாளவிகாவின் கதாபாத்திரத்துக்கு பெரிதாக வேலை இல்லை என்றே கூற வேண்டும். படத்தில் பேசப்படும் கதாபாத்திரங்கள் இரண்டு பேர். துறுதுறு நடிப்பை வெளிப்படத்தி தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் சிறிது நேரமே வந்தாலும் அனைவரையும் கவனிக்க வைத்திருப்பது அமீர் மட்டுமே.
அரசியல்வாதி சமுத்திரக்கனி சுத்தமா எடுபடவே இல்லை. மாமாவாக ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு சற்று உதவியிருக்கிறது.
கிருஷ்ண குமார், மகேந்திரன் இவர்களது திறமை வீணடிக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஏமாற்றம் தான் மிச்சம்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இசையும், பாடலும் பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து, அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் புகுத்தி சுவாரஸ்யம் இல்லா கதைக்கு பலவீனமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார் துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன். வித்தியாசமான கதை சொல்லலிலும், ஸ்டைலீஷான மேக்கிங்கிலும் ரசிகர்களை அசத்தக்கூடிய கார்த்திக் நரேனுக்கு என்ன ஆச்சு! தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் TGதியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள மாறன் தனுஷின் தீவிர ரசிகர்களுக்கு மாபெரும் ஏமாற்றமே மிச்சம்.