Chennai City News

மாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை ரோஜா!!

மாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை ரோஜா!!

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .

இந்த படத்தின் ‘ராசத்தியே ” என தொடங்கும் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா இன்று வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் .இப்பாடலுக்கு S தமன் இசையமைத்துள்ளார் .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

தொழில்நுட்பக்குழு :

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்

இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – ப.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Exit mobile version