மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2 தான் டப்பாங்குத்தா!
சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்று வட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து டப்பாங்குத்து இயக்குனர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது.
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோவில் திருவிழாக்களில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்துவார்கள். அதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம்.
கரகாட்டம் போல் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் திருவிழா நாட்களில் தெருக்கூத்து ஆட்டம் போடுவார்கள். அதில் ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என வித விதமாக ஆடி பாடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அந்த கலையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதே டப்பாங்குத்து திரைப்படம்.
டப்பாங்குத்தில் 15 வகையான நாட்டுப்புற பாடலுக்கு சரவணன் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்: தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா மற்றும் ஆண்ட்ரூஸ்.
கர்ணன் என்ற படத்தில் கிடக்குழி மாரியம்மா பாடிய “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் ராம்ஜி கேசட்டில் இடம் பெற்ற பாடல். அதே போல் டப்பாங்குத்து திரைப்படத்தில் ராம்ஜி கேசட்டின் உரிமை பெற்று 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளது இந்த படத்திற்கு ஒரு சிறப்பு.