Site icon Chennai City News

போதை பொருளுக்கு எதிரான ‘கவுண்ட்டவுன்’

போதை பொருளுக்கு எதிரான ‘கவுண்ட்டவுன்’

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 350 மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்த ‘யக்ஷி’ உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல குறும்படங்களை தயாரித்தவர் பிரிஜேஷ் பிரதாப்.

குறும்பட உலகில் பிரபலமான இவர் புதிதாக இயக்கியிருக்கும் குறும்படம் ‘கவுண்ட்டவுன்’. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இக்குறும்படத்தின் கதையை ரமேஷ் கோகிப்பள்ளி எழுத, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் பிரிஜேஷ் பிரதாப்.

‘கவுண்ட்டவுன்’ என்பது இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பாவனையின் பின்னணியில் அமைக்கப்பட்ட குறும்படமாகும்.
மகிழ்ச்சியாக வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ள முயல்வதும் அதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி போலீசார் நடத்தும் விசாரணையுமே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, தவறுகளை திருத்தி வாழ்வதே வாழ்க்கை என்பதை மையக்கருவாக கொண்டதே ‘கவுண்ட்டவுன்’
ஒருவன் எப்பொழுது போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்குகிறானோ அவனது வாழ்க்கையின் கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விடுகிறது., போதை மருந்து மாஃபியாவுக்கு கவுண்ட்டவுன் சொல்லி கொண்டு , அவர்களை பின் தொடர்ந்து போலீஸ் படை எப்போதும் இருப்பதாகவும் எச்சரிக்கிறது இந்த படம்.

தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல குறும்படங்களை தயாரித்த பிரிஜேஷ் பிரதாப் இயக்கியுள்ள ‘கவுண்ட்டவுன்’, சமூகத்தில் போதைப்பொருள் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் இந்த நேரத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம்.

கேரளாவில் பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெற்றிகரமாக திரையிடப்பட்ட இப்படம் தற்போது முழுமையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version