Chennai City News

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘விடுபட்ட குற்றங்கள்’

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘ விடுபட்ட குற்றங்கள்’

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘விடுபட்ட குற்றங்கள்’.
புதிய படத்தில் புதுமுக இயக்குனர் அறிமுகம்.

” நம் தேசத்தின் தெய்வமாக நாம் மதிப்பது பெண்களைத் தான். குழந்தைகள் முதல் கிழவிகள் வரை நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக  நடைபெறும் பாலியல் வன்கொடுமை களுக்கு ஒரு தீர்வாகத்தான். ” விடுபட்ட குற்றங்கள் ” படம் இருக்கும். என்று உறுதி பட கூறுகிறார் புதுமுக இயக்குனரான விஜேந்திரன். இவரே கதை திரைக்கதை வசனத்தையும் எழுதி உள்ளார்.

வி.எஸ்.ஆர். கிரியேஷன் சார்பில் உமாமகேஸ்வரி தயாரித்துள்ளார். கதையின் நாயகனாக புதுமுகம் அஜய் நடிக்கிறார். நாயகியாக மஹானா, மற்றும் காக்கா முட்டை விக்னேஷ், டாக்டர் ராஜசேகரின் தம்பி செல்வா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி , வர்கீஸ், பிர்லா போஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆர். ராகேஷ், ஆர்.செல்லதுரை இருவரும் தயாரிப்பு நிர்வாகமிட, முரளி கிருஷ்ணன் இசையையும், ஜெயசந்திரன் ஒளிப்பதிவையும், சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பையும், பா.நிகரன் – முரளி கிருஷ்ணன் இருவரும் பாடல்களையும், அம்ரீன் அபூபக்கர் சண்டை பயிற்சியையும் , தஸ்தா நடன பயிற்சியையும், எம்.பி.ராமச்சந்திரன் நிர்வாக உதவியையும் கவனிக்கின்றனர்.

PRO
விஜயமுரளி
கிளாமர் சத்யா

Exit mobile version