
நடிகர்களின் விவாகரத்துகள் “நல்ல டிரெண்ட் செட்டர்கள்”- பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து

சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா – நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த இடியாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது.
ஷூல், சிவா, சுர்யா நடித்த ரக்த்த ஷரித்தரா போன்ற பல மொழிகளில் படங்கல்ளை இயக்கி முன்ன்ணி இயக்குனராக விளங்கி வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மா ச்ர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டிருப்பது, “நட்சத்திரங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகளைப் பற்றி இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல டிரெண்ட் செட்டர்கள்” என விவாகரத்துகளை ஆதரிப்பது போல் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Star divorces are good trend setters to warn young people about the dangers of marriages
— Ram Gopal Varma (@RGVzoomin) January 18, 2022
Only divorces should be celebrated with sangeet because of getting liberated and marriages should happen quietly in process of testing each other’s danger qualities
— Ram Gopal Varma (@RGVzoomin) January 18, 2022