திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

0
308

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதி ராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.