டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம்
கன்னடத் திரையுலகில் தன்னிகரற்ற வசூல் மன்னனாகத் திகழும் ‘கருநாட சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
இந்தப் படத்தை சாகர், கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து ஷ்ரிதிக் மோஷன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார்கள். இது இந்த நிறுவனத்தின் முதல் படமாகும்.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை பாலாஜி மாதவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குநர் பி.வாசு அவர்களின் தங்கை மகனான பாலாஜி மாதவன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் இயக்குநர் ஆர்.மாதவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
படத்தின் தலைப்பை விரைவிலேயே பிரத்யேகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தனித்துவமான கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் சிவராஜ்குமார் அவர்களின் ஆலோசனைப்படி, இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அவர் ரசிகர்கள் யூகிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.