Site icon Chennai City News

ஜனவரியில் 3 -வது குழந்தை – செல்வராகவன் மனைவி பூரிப்பு

ஜனவரியில் 3 -வது குழந்தை – செல்வராகவன் மனைவி பூரிப்பு

தான் கர்ப்பம் தரித்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் கீதாஞ்சலி செல்வராகவன், மூன்றாவது குழந்தையைக் காண காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் கர்ப்பம் தரித்திருப்பதாக வெளியான தகவலை தற்போது அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் கீதாஞ்சலி, மூன்றாவது குழந்தைக்காக லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். ஜனவரி மாதத்தில் 3-வது குழந்தை வரும்” என்று கூறியுள்ளார்.

கீதாஞ்சலி செல்வராகவன் சொல்லியிருக்கும் குட் நியூஸ்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்

Exit mobile version