
செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’… போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக் கறையுடன் கைகளைக் கட்டி குத்த வைத்திருக்க அவர்கள் முன்பு கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.
யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். பரியேறும் பெருமாள் படத்தின் கலை இயக்குநர் ராமு தங்கராஜ் இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளார்.
Introducing the most wanted from #SaaniKaayidham @arunmatheswaran @thisisysr @KeerthyOfficial @selvaraghavan @yaminiyag @ramu_thangaraj @dhilipaction @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss @onlynikil @CtcMediaboy @nixyyyyy @gopalbalaji @Screensceneoffl pic.twitter.com/Gw8CWmG03f
— Dhanush (@dhanushkraja) November 15, 2020