Chennai City News

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”

இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.

பாடல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு – நாகூரான்
கலை – உதயா UA
சண்டைப் பயிற்சி – விக்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, சதீஷ் (AIM)

Exit mobile version