குதிரைவால் திரைவிமர்சனம்: மிக பொறுமையாக பார்த்தால், நிச்சயம் குதிரைவால் புதிய அனுபவத்தை தரும்
(Rating – 3.5 Star)

G. இராஜேஷ்ஷின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய கிரிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பு குணா
படத்தின் முதல் காட்சியிலேயே சரவணன் (கலையரசன்), உறக்கத்திலிருந்து விழிக்கிறார். தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டபோது தனக்கு வால் முளைத்திருப்பதை உணர்கிறார். கனவில் நடந்ததை நிஜத்தில் தேடுகிறார். வயதான பாட்டியிடம், கணித ஆசிரியரிடம், ஜோதிடரிடம் என ஒவ்வொருவரின் உதவியைத் தேடி செல்கிறார். “இது எப்படி எனக்கு முளைச்சிருக்கு” என கேள்வி கேட்டுக்கொண்டே விடை தேடுகிறார். பதில் தேடிச் செல்லும் அவருக்கு, நிஜ வாழ்க்கையில், அவர் வேலை செய்யும் பணி இடத்தில் சில மாறுதல்களை உணர்கிறார். சரவணனால் சரவணனாக இருக்க முடியவில்லை. வேறொருவராக உணர்கிறார். அதை கனவிலும், நிஜத்திலும் தேடி செல்கிறார். அதுதான் கதையின் கரு.
சரவணனின் (கலையரசன்) திரை பயணத்தில் இது ஒரு முக்கியமான படம். வால் முளைத்த பிறகு வாலின் அசைவுக்கு ஏற்றார் போல கலையரசன நடிப்பு சிறப்பு.
படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மிக சிறப்பாக உள்ளது.

பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸரின் இசையமைப்பும் மற்றும் பிண்ணனி இசையும் கூடுதல் பெரும்பலம் சேர்க்கிறது. மேலும் அந்தோனி BJ ரூபன் ஒலிப்பதிவு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துகிறது.
கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி புது முயற்சியில் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட குதிரைவால், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் கொடுத்துள்ளனர் .
மொத்தத்தில் குதிரைவால் படத்தை மிக பொறுமையாக பார்த்தால், நிச்சயம் குதிரைவால் புதிய அனுபவத்தை தரும். இது திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே நிச்சயமாக ஒரு புதிய அனுபவமாக பேசப்படும்.