
காவல்துறையினரை சிந்திக்க வைக்கும் ‘வலிமை’ ட்ரெய்லர்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து இருக்கும் இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது படக்குழு. நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக நடித்துள்ள அஜித், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப்பிறகு இளமையாகவும் ஃபிட்டாகவும் கவனம் ஈர்க்கிறார். அஜித் ’கியர்’ரைப் பிடித்து பைக்கில் பறக்கும் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லர் இறுதிவரை ’ஃபயர்’ராய் சாகசங்களுடனேயே நிறைவடைகிறது. மிரட்டலுடன் இருக்கும் பைக் சேஸிங் காட்சிகளே ‘வலிமை’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கே புதிய பேரனுபவத்தை கொடுக்கும் என்பதை உணர்த்துகிறது. அதேசமயம், இயக்குநர் ஹெச்.வினோத்தின் உழைப்பும் மெனக்கெடல்களையும் கண்முன் நிறுத்துகிறது.
சமீபத்தில் இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.