இரவின் நிழல் தரம் தாழ்ந்த ஒரு சினிமா – இயக்குனர் சத்தியபதி
இரவின் நிழல் படம்பார்க்க நேரிட்டது. தரம் தாழ்ந்த ஒரு சினிமா. இப்படித்தான் வசனம் எழுதி, படம் எடுக்க நிறய பேருக்கு தெரியும். அதையெல்லாம் தவிர்த்து தான் இங்கே அனைவரும் வேலை செய்கிறோம்.
படைப்பாளிக்கு சமூக சிந்தனை வேண்டாமா சமூகம் தானே செலவு செய்து படம் பார்க்கிறது ஒரே ஷாட்டில் எடுப்பது தவறல்ல. தலைவாழை இலைபடையல் போட்டு நடுவில் கொஞ்சம் நரவலை வைத்தால் சாப்பிட சகிப்புத்தன்மையுடன் முடியுமா?
வசன உச்சரிப்பிற்கு மியூட் போட்டாலும் மக்களுக்கு புரியாது என்று நினைப்பது மிகப்பெரிய அய்யோக்கியத்தனம்.
கொரோனாவிற்கு பிறகு இப்போது தான் தமிழ் சினிமாவிற்கு மக்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதையும் வித்தியாசம் என்ற பெயரில் கெடுத்து விடவேணடாம்.
அருவருக்கத்தக்க வசனங்கள் எழுத இங்கே ஆயிரம்பேர் உண்டு அதையும் தாண்டி நல்லவர்கள் இங்கே இருப்பதால்தான் இதையெல்லாம் சகித்து போகவேண்டியுள்ளது.
இவன் சத்தியபதி இயக்குனர்.