Site icon Chennai City News

இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி!

இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி!

கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள்.
தொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் படபிடிப்பினை முடித்த தளபதி விஜய் அங்கிருக்கும் பேருந்து ஒன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் .

அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது தளபதி விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

Exit mobile version