
குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடு, காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்றனர். இதில், கொரோனா வைரஸ், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து, குவாட் முழுமையாக வளர்ந்துள்ள நிலையில், இனி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாக இருக்கும் என கூறினார். மேலும், மதச்சார்பற்ற, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஊக்குவிக்க, இந்தியா முன்பைப் போலவே நட்பு நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என குறிப்பிட்டார்.
மேலும், குவாட் அமைப்பின் நேர்மறையான தொலைநோக்கு பார்வையை, பண்டைய இந்திய தத்துவமான உலகம் ஒரே குடும்பம் என்பதன் விரிவாக்கமாகவே கருதுவதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த, நிதி ஆதாரம், உற்பத்தி திறன், தளவாடங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்ட, இந்திய, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளும் ஒப்புதல்
இதனிடையே, பிரதமர் மோடியும், அமெரிக்கா அதிபராக பதவியேற்றுள்ள பைடனும், இந்த மாநாட்டில் முதல்முறையாக கலந்துரையாடினார். அப்போது பிரதமரை வரவேற்று பேசிய பைடன்,ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்தியாவுடனும், பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், திறந்த மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியம், அனைத்து நாடுகளின் எதிர்காலத்திற்கும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.