ஸ்வீட் ஹார்ட் சினிமா விமர்சனம் : ஸ்வீட் ஹார்ட் காமெடி வித் ரொமான்டிக் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3.5/5
நடிப்பு :
ரியோ ராஜ் – வாசு
கோபிகா ரமேஷ் மனு
அருணாச்சலேஸ்வரன் – செந்தில்
பௌசி – காயத்திரி
மனு அப்பா – ரஞ்சி பணிக்கர்
மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பகலைஞர்கள்:
எழுத்து – இயக்கம் : ஸ்வினீத் எஸ். சுகுமார்
தயாரிப்பு : யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம் : YSR பிலிம்ஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : பாலாஜி சுப்ரமணியம்
படத்தொகுப்பு : தமிழரசன்
கலை இயக்குனர் : சிவ சங்கர்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
சிறுவயதில் தன் மீது அதீத அன்பு வைத்த தாய் அடிக்கடி தந்தையிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட திடீரென ஒரு நாள் தன்னையும் தன் அக்காவையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் தன் தாய் சென்று விடுகிறாள். வாசு (ரியோ ராஜ்) வாலிப பருவத்தில் அவரது குழந்தைப் பருவச் ஏற்பட்ட மனக்கசப்பு, கல்யாணம், குழந்தைகள், குடும்பம், இவற்றின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். ஆனால், அவரது காதலி மனு (கோபிகா ரமேஷ்) வாசுவின் கருத்துக்கு நேர் எதிரானவர். மனு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்க்கும் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து செல்கிறார்கள். இச்சூழ்நிலையில் மனுவின் பெற்றோர் அவளுடைய பிறந்த நாளில் படுக்கையறையில் மனு வாசுவுடன் ஒரு நெருக்கமான சூழ்நிலையில் இருப்பதை பார்த்து நிலைகுலைந்து போகிறார்கள். வீட்டில் சிறை கைதி போல் இருந்த மனு ஒரு கட்டத்தில் கர்ப்பமானது தெரிய வருகிறது. வாசு அதிர்ச்சி அடைகிறார். கமிட்மென்ட் உறவுகளை விரும்பாத வாசு மனுவிடம் கருவை கலைத்து விடும்படி சொல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் வழக்கமான இன்றைய காலகட்ட சினிமாவில் அடிக்கடி பார்த்து அலுத்துப் போன பாத்திரமாக இருந்தாலும் இருவரும் நடிப்பில் அசத்தி உள்ளனர்.
அருணாச்சலேஸ்வரன், பௌசி, ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் கவனத்தை பெறுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் பின்னணி இசை, பாலாஜி சுப்ரமணியம் காட்சி கோணங்கள், எடிட்டர் தமிழரசன் படத்தொகுப்பு, சிவா சங்கரின் கலை இயக்கம் ஆகியோரின் பங்களிப்பு நான்-லீனியர் பாணி திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டி வலு சேர்த்துள்ளது.
இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களின் நவீன உறவுகளை ஆராய்கிறது. உடைந்த உறவுகள் மற்றும் சீரான உறவுகள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற எமோஷனலான கதையை, காமெடி கலந்த திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
மொத்தத்தில் YSR பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் ஸ்வீட் ஹார்ட் காமெடி வித் ரொமான்டிக் என்டர்டெய்னர்.